பார்த்தீபன், எழிலினி, நிலவன், அ.இன்பன், குமாரசாமி பரராசா (தொகுப்பாசிரியர்கள்). பிரான்ஸ்: வெளியீட்டுப் பிரிவு, சங்கநாதம் கலைக் குழுமம், தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், 1வது பதிப்பு, மார்ச் 2024. (பிரான்ஸ்: அச்சக விபரம் தரப்படவில்லை).
427 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
தாயக, புலம்பெயர் கலைஞர்களின் அனுபவத் திரட்டாக இந்நூல் வெளிவந்துள்ளது. வாழ்த்துரைகள், கவிஞர் புதுவை இரத்தினதுரை தொடர்பான பல்வேறு பிரமுகர்களின் மலரும் நினைவுகள், நேர்காணல்கள், புதுவை இரத்தினதுரையின் பேரில் இயற்றப்பட்ட கவிதைகள் என்பன தொகுக்கப்பட்டுள்ளன. புதுவை இரத்தினதுரை என அழைக்கப்படும் வரதலிங்கம் இரத்தினதுரை (பிறப்பு: 3.12.1948) ஈழத்துக் கவிஞரும், பாடலாசிரியரும், சிற்பக் கலைஞருமாவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். ஏராளமான தமிழ்த் தேசியப் புரட்சிப் பாடல்களை எழுதியுள்ளார். 2009 மே மாதத்தில் ஈழப் போர் முடிவுக்கு வந்த காலத்தில் காணாமல் போனார். 2016 மே 21 இல், தமிழ் கார்டியன், அவர் கடைசியாக 2009 மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தின் காவலில் காணப்பட்டதாக செய்தி வெளியிட்டது. 2012 இல், சிங்கள திவயின நாளிதழ், இதனை உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தது.