17940 தமிழீழ தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை பவளவிழா சிறப்பு மலர்- 2024.

நூலாக்கக் குழு. பிரான்ஸ்: சங்கநாதம் கலைக் குழுமம், தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், 2வது பதிப்பு, டிசம்பர் 2024, 1வது பதிப்பு, மார்ச் 2024. (பிரான்ஸ்: Aurora Print Solutions).

viii, 9-460 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-99321-2-8.

தரமான வடிவமைப்பில் வெளிவந்துள்ள இவ்விரண்டாவது பதிப்பு மேலும் பல புதிய மனப் பகிர்வுகளுடனும்  புதிய வடிவமைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழீழத் தேசியத் தலைவர் உட்பட தமிழீழ நிழலரசின் பல்வேறு துறைகளின் பொறுப்பாளர்கள், கவிஞரின் திறன் பற்றி வியந்து எழுதிய உரைகளும், சமகாலத்தில் அவருடன் பழகிய, பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் அனுபவக் குறிப்புகள், கவிச்சரங்கள் அடங்கிய இரண்டாம் பதிப்பின் நூல் தொகுப்பாளர்களாக அருண்நிலா, எழிலினி, அரு. இன்பன், குமாரசாமி பரராசா, பார்த்தீபன், மீனா, கானவி, அன்பனா, துளசிச் செல்வன்ஆகியோர் இயங்கியுள்ளனர். இத்தொகுப்பில் கவிஞரின் கவிதைகள் சிலவும் நேர்காணல்களும், அவர் பற்றிய பார்வைகளும் தமிழில் மாத்திரமன்றி பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்