17941 தீரா நினைவுகள்.

எஸ்.எல்.எம்.ஹனீபா. ஏறாவூர்: Ghazal Publications 1வது பதிப்பு, ஜுலை 2023. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ்).

128 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-58162-3-1.

தனது முகநூல் பதிவுகளிலிருந்து தேர்ந்த 56 பதிவுகளைத் தொகுத்து வெளியிட்ட ‘என்டெ சீவியத்திலிருந்து” என்ற நூலில் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்கள் தனது வாழ்க்கையின் சில நிகழ்வுகள், சில அனுபவங்கள், சில காட்சிகள் என ஒரு இலக்கியப் பதிவினை மேற்கொண்டிருந்தார். அவரது சுய வரலாற்றின் நினைவுகளின் தொடர்ச்சியாக- இரண்டாம் பாகமாக இந்நூல் வெளிவந்துள்ளது. 1960களிலிருந்து கடந்த சுமார் அறுபது ஆண்டுகளாக இலக்கியத்துறையில் தடம் பதித்து வருபவர் எஸ்.எல்.எம்.ஹனீபா. இதுவரை சுமார்  40 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ‘மக்கத்துச் சால்வை’ (1992), ‘அவளும் ஒரு பாற்கடல்’ (2007) ஆகிய தொகுப்புக்கள் முன்னதாக வெளிவந்துள்ளன. அவற்றில் இவரது சிறுகதைகள் சில தொகுக்கப்பட்டிருந்தன. தீரா நினைவுகளில் எஸ்.எல்.எம்.ஹனீபா தனது மலரும் நினைவுகளை, கொழும்பில் உடும்பு பிடித்த கதை, மங்கும் காலம் மா- பொங்கும் காலம் புளி, அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி, கருக்காய் மர நிழலாக பின்தொடரும் சாரா, காடென்பது மரங்களல்ல, எனது வீடு, மரங்களுக்கு நடக்கும் கொடுமை, ஃபிலிம்ரோல் போட்டோக்கள், விதானைப் பொண்டில், திருமதி ராஜம் கிருஷ்ணன்-சில நினைவுகள், நெஞ்சில் நிறைந்த நண்பர், கோமல் சுவாமிநாதன், நமது முகங்களை நோக்கி!, இராஜேந்திரம்பிள்ளை சிவலிங்கம், எஸ்.ஆர். நினைவுகளுடன், பித்தன் என்றொரு மானுடன், பித்தனின் நினைவுநாள், செங்கவெள்ளை-ஹஸீன், அ.செ.மு., ஆனந்த சங்கரி, என்னையும் அவர்கள் சிலுவையில் அறைந்தனர், மூப்பு, கண்ணம்மா ரீச்சர், புதிய பாடசாலை திறப்பு விழா, மீராவோடையா? முறாவோடையா? சுனாமி நினைவாக, பாழ்பட்டுப்போன வெள்ளாமை வெட்டு மெஷின், எங்கள் கிராமத்துக்கும் குழாய்நீர் குடிநீர் வருகிறது, எந்தையே!, பாடநூலில் மக்கத்துச் சால்வை, மக்கத்துச் சால்வை பாராட்டுவிழா, 44 வருடங்கள் 3 சந்திப்புகள், நான் கண்ட மைனாவும் கஜநாயக்க நிலமயும், நான் கண்ட மைனாவின் நினைவில் பிரிகேடியர் பூஜாபிட்டிய, எங்கள் ஊரில் ஒரு பாக்கிஸ்தானி, கவிஞர் சுகுமாரன், இலுப்பை, கிழக்கிலங்கை முஸ்லீம்களின் வரலாற்றில் ஒரு பார்வை, கிழக்கிலங்கையில் வாழ்ந்த முஸ்லிம் குடிகளும்அவர்கள்தம்;…, மச்சான் சொன்ன மஞ்சள் கதை, பிரிகேடியர் சில்வாவும் சரணடைந்த 21 புலி உறுப்பினர்களும், கிழக்குப் பல்கலைக்கழகமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களும், உரமும் அறமும், மர்ஹ{ம் புகாரி விதானையார், அடுத்தவனுக்கு ஓ.டி. கொடுத்து என்னை வஞ்சித்த முகாமையாளர், சுன்னத் (விருத்த சேதனம்) கல்யாணமும் பறைமேளக் கூத்தும், அம்பிகைபாகன் நினைவாக, என்ட ராணியும் எங்கள் ராணியும், நெஞ்சில் நிறைந்த வத்துகாமம், டீயயசi பள்ளிவாசல் ஜும்மாப் பள்ளிவாசலான கதை ஆகிய 50 தலைப்புகளின் வழியாக பதிவுசெய்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71434).

ஏனைய பதிவுகள்