எம்.அப்துல் ரசாக் (பதிப்பாசிரியர்). பாலமுனை: பாலமுனை பாறூக் இலக்கிய பொன்விழா மன்றம், 14, டிரனேஜ் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (அக்கரைப்பற்று: சிட்டி பொயின்ட் பிரின்டர்ஸ்).
288 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1000., அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-624-98508-0-4.
பாவேந்தல் பொன்னேடு ஆசிகளும் வாழ்த்துகளும், ஆய்வுகள் கவிதைகள் கட்டுரைகள் வாழ்த்துகள், பாவேந்தல் படைப்புக்கள்: பார்வைச் சுருக்கம், பாவேந்தல்: அறிமுகமும்-படைப்புலகும், நினைவுகளும் நிழல்களும் ஆகிய ஐந்து பெரும் பிரிவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. கவிதை, காவியம், கதை, குறும்பா, கட்டுரையாக்கம், பாடல்கள், கவியரங்க வெளிப்பாடுகள் எனப் பல்வகை ஆளுமைகளுடன் இலக்கிய இருப்பிற்கான தடம்பதித்துள்ள பாலமுனை பாறூக் அவர்களின் இலக்கியப் பணியின் ஐம்பதாண்டு நிறைவையொட்டி இப்பொன்னேடு வெளிவந்துள்ளது. பாலமுனை பாறூக்கின் பணிகள் அனைத்தையும் ஒரு வெட்டுமுகப் பார்வையில் கொண்டுவரும் முயற்சியே இந்நூலாகும். அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இலக்கியத் தளங்களில் பயணித்துவரும் பெரும்பான்மை எழுத்தாளர்களின் ஒன்றுபட்ட பங்களிப்புடன் இம்மலர் வெளிவந்துள்ளது.