கெக்கிராவ ஸஹானா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).
ii, 101 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-51679-4-9.25
அத்தியாயங்களில் நினைவுக் கட்டுரைத் தொடராக கடித உருவில் எழுதப்பட்ட சுய வரலாற்று நூல் இது. ‘தன்மானத்தையும் ஆழ்ந்த நூல் பரிச்சயத்தையும் சிந்தனை அறிவையும் மட்டுமே துணையாகக் கொண்டு, ஒரு பின்தங்கிய கல்விப் புலத்தில் வாழ்ந்த இளம் பெண்ணொருத்தியின் வாழ்வியல் அனுபவங்கள் கடிதங்களினூடாகவும் தன்கூற்றாகவும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 16ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15559).