உதயன் (இயற்பெயர்: மு.திருநாவுக்கரசு). யாழ்ப்பாணம்: மறுமலர்ச்சிக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆவணி 1985. (அச்சக விபரம் தரப்படவில்லை).
12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20ஒ14 சமீ.
அயர்லாந்து பிரித்தானியாவுக்கு மேற்கே 50 மைல் தொலைவில் உள்ள ஒரு தீவாகும். அயர்லாந்தில் அல்ஸ்ரர் (Ulster), முன்ஸ்ரர் (Munster), லீன்ஸ்ரர் (Leinster), கொன்னாச் (Connacht) என நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இன்று அயர்லாந்து இரு பகுதிகளாகப் பிரிவினை செய்யப்பட்டுள்ளது. ஒன்று அல்ஸ்ரர் என்னும் பிராந்தியத்தைக் கொண்ட வட அயர்லாந்தும், மற்றது ஏனைய மூன்று பிராந்தியங்களையும் கொண்ட தென் அயர்லாந்துமாகும். வட அயர்லாந்து பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழுள்ள ஒரு பகுதியாகவும், தென் அயர்லாந்து அயர்லாந்துக் குடியரசாகவும் இன்று அமைந்துள்ளது. 1922ஆம் ஆண்டு தென் அயர்லாந்து பிரித்தானிய முடிக்குக் கீழான சுதந்திர அரசு (Irish Free State) என்ற உரிமையைப் பெற்றது. பின்பு இது 1948ஆம் ஆண்டு குடியரசாகியது. வட அயர்லாந்து இன்னும் ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் ஒரு மாகாணமாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. கி.பி. 1166ஆம் ஆண்டு ஆங்கிலோ-நோர்மன்ஸினர் அயர்லாந்தின் மீது படையெடுத்தனர். 1170ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் இரண்டாம் ஹென்றி யின் ஆதிக்கத்தின் கீழ் அயர்லாந்து கொண்டுவரப்பட்டது. ஆங்கில நாட்டை எதிர்த்து அயர்லாந்து மக்கள் தாம் கைப்பற்றப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து போராடி வந்தனர். அவர்களது வீரம் செறிந்த போராட்டத்தின் சுருக்க அறிமுகமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37422).