வீ.எஸ்.எஸ். ராம், டி.வி.கே.மூர்த்தி. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2019. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
iv, 212 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 660., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-685-152-6.
வி.எஸ்.எஸ்.ராம் மற்றும் டி.வி.கே.மூர்த்தி ஆகியோர் இணைந்து எழுதிய ’புதுமுறைச் சரித்திரம்’ என்ற தலைப்பிலான நூல் இலங்கைச் சரித்திரம், உலகச் சரித்திரம் என்ற இரண்டு பகுதிகளை உள்ளடக்கி 1962இல் வெளிவந்திருந்தது. இப்பொழுது இந்நூல் ‘இலங்கைச் சரித்திரம்’ என்ற பிரிவை மாத்திரம் பிரித்தெடுத்து தனிநூலாக சேமமடு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் குடியேற்றவாத வரலாறு பற்றி அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் போர்த்துக்கேயர் முதல் பிரித்தானியர் வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த பதிவுகளை தெரிந்துகொள்வதற்கு இந்நூல் உதவுகின்றது. 25 இயல்களில் எழுதப்பட்டுள்ள இந்நூல், 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இலங்கையின் உள்நாட்டு நிலைமை, கடல் மார்க்கமும் போர்த்துக்கீசரும், புவனேகபாகுவும் மாயாதுன்னையும் (1521-1551), கோட்டை இராச்சியத்தின் அழிவு, சீதாவாக்கையின் எழுச்சியும் வீழ்ச்சியும் (1521-1592), யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுதல், அசிவிடோ ஆட்சி (1594-1612), தொன் கொனஸ்தந்தைன் திசா, கண்டி நாட்டின் சுதந்திரப் போர் (1582-1635), போர்த்துக்கீசருக்கும் ஒல்லாந்தருக்கும் இடையே நிகழ்ந்த போராட்டம், போர்த்துக்கீசர் ஆட்சியின் பலன்கள், இராசசிங்கன்-2 (1635-1687), இரண்டாம் விமலதர்மசூரியன் (1687-1707), பின் வந்த அரசர்கள் (1706-1747), கீர்த்தி ஸ்ரீ இராசசிங்கனும் பௌத்த சமயப் புனருத்தாரணமும், ஒல்லாந்தரின் வீழ்ச்சி, ஒல்லாந்தர் ஆட்சியால் விளைந்த பலன்கள், ஆங்கில ஆட்சியின் ஆரம்பம் (1796-1798), கண்டி இராச்சியப் போர், மூன்று தேசாதிபதிகளின் நிர்வாகம் (1798-1820), நிருவாக அபிவிருத்தி (1821-1850), அமைதியும் முன்னேற்றமும் (1850-1914), டொனமூர் அறிக்கையும் அரசியல் மாறுதல்களும், சோல்பரி விசாரணைக் குழுவும் அரசியல் திருத்தங்களும், தேசிய அரசாங்கம் ஆகிய அத்தியாயத் தலைப்புகளைக் கொண்டுள்ளது. இந்நூலின் மேலட்டையில் ‘இலங்கை வரலாறு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.