17949 இழிவான அரசியல் வரலாறும் இலங்கையின் தலைவிதியும்.

றோய் றொட்ரிகோ. நீர்கொழும்பு: தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், இல.10, மல்வத்தை வீதி, இணை வெளியீடு, ராஜகிரிய: காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு, இல. 57, 1ம் தெரு, மெத வெலிகட, 1வது பதிப்பு, 2023. (பன்னிப்பிட்டிய: ஸ்டார்நீட் சொல்யூஷன்ஸ்).

418 பக்கம், விலை: ரூபா 1500., ஒளிப்படங்கள், அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8103-36-4.

றோய் றொட்ரிகோ நீர்கொழும்புப் பிரதேசத்தில் சமூக மற்றும் கலாசார செயற்பாடுகளில் முன்நின்று செயற்படுபவர். ‘விசுர’ வானொலி சேவையின் ஆரம்பகால உறுப்பினர். இந்நூலில் இலங்கையின் வரலாற்றையும் சமகாலத்தையும் இணைத்து சுவைபடப் பதிவுசெய்திருக்கிறார். முன்னுரை (பேராசிரியர் சுமனசிரி லியனகே), அறிமுகம், வரலாற்றை மீட்டிப் பார்த்தல் ஆகிய அறிமுகப் பக்கங்களைத் தொடர்ந்து ஐந்து அத்தியாயங்கள் – நாம், மன்னர்களும் நாமும், வேற்று நாட்டவரும் நாமும், அவர்களுடன் நாங்கள், கர்மவினையும் நாமும் ஆகிய தலைப்புகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்