17951 1984, 1985 மன்னார்ப் படுகொலைகள் சொல்வதென்ன? (40ஆம் ஆண்டு நினைவுகூரல்).

செ.அன்புராசா. மன்னார்: அருள்தந்தை செபமாலை அன்புராசா, முருங்கன், 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

80 பக்கம், விலை: ரூபா 300, அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-94268-0-1.

1984 மன்னார் படுகொலைகள் 1984 டிசம்பர் 4 அன்று இலங்கையின் வடக்கே மன்னார் நகரில் இலங்கை இராணுவம் 107 க்கும் 150 க்கும் இடைப்பட்ட தமிழ் மக்களைப் படுகொலை செய்த நிகழ்வாகும். மூன்று இராணுவ வாகனங்கள் கண்ணிவெடியில் சிக்கியதில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக இப்படுகொலைகள் இடம்பெற்றன. இந்நூலில் நீதி மறுக்கப்பட்ட மன்னார்ப் படுகொலைகளுக்கு வயது 40 (1984 டிசம்பர் 04, பயங்கரம் குடிகொண்டது, நிலக்கண்ணிவெடி வெடித்தது, ஜனாதிபதிக்குக் கடிதம், அரசின் அபத்தமான பதில், நேரடிச் சாட்சியங்கள், யாரொடு நோவோம்?), உத்தமர் வில்லியம் ஐயா, நல்ல சமாரியன் வைத்தியர் ஆ. திருநாவுக்கரசு, மக்கள் பணியாளன் போதகர் ஜீ.என்.ஜெயராஜசிங்கம் (மனித உரிமைச் செயற்பாட்டாளர், சமூகப் பணிகள், எல்லோருக்கும் எல்லாமானேன், ஏழைகளை அன்புசெய்த புனிதன்), முள்ளிக்குளத்தின் அன்றையநாள் அவலம், ஈழத்தின் ‘ஒஸ்கார் றோமேறோ’ மேரி பஸ்ரியன் (நேரடிச் சான்று, இதயத்தைப் பிழியும் விடயம், படுகொலைக்கான காரணம், இயேசுவின் உண்மையான சீடன்), வட்டக்கண்டல் பகுதி பட்ட துயர், பேசாலையின் அன்றைய பெருந்துயர், அடம்பொன்தாழ்வில் நடந்த அவலங்கள் (இளந்தம்பதியினரின் படுகொலை), நிறைவுரை ஆகிய பத்துத் தலைப்புகளில் மன்னார்ப் படுகொலைகள் பற்றிய தகவல்கள் சுவடிப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்