கொக்குவில் முதலி. யாழ்ப்பாணம்: அண்ணா பதிப்பகம், கொக்குவில், 1வது பதிப்பு, வைகாசி 1970. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).
20 பக்கம், விலை: 35 சதம், அளவு: 20×14 சமீ.
‘இன்று அதிகமான தமிழ் அரசியல் கட்சிகள் தமது உரிமைகள் பாராளுமன்ற முறைமூலம் தீர்க்கப்படாது விட்டால் தனிநாடு அமைப்பதே சாலச்சிறந்தது என்கின்றனர். ஆகவே, ஈழத் தமிழ்நாடு வேண்டுமா? ஏன் வேண்டும்?, ஈழத் தமிழ்நாடு பிரிந்தால் எம்மால் வாழமுடியுமா? என்பன போன்ற வினாக்களுக்கு உரிய பதில்களை கொக்குவில் முதலி அவர்கள் இப்பிரசுரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.’ (வெளியீட்டுரை). (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114304).