17953 குருக்கள் மடத்துப் பையன் : தோண்டப்படாத குழிகளுக்குள் தொலைக்கப்படும் வரலாறு.

எஸ்.எம்.எம்.பஷீர். பிரான்ஸ்: நிச்சாமம் வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 14: ராகாஸ்).

88 பக்கம், ஒளிப்படங்கள், விலை: இந்திய ரூபா 80.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-907882-0-5.

‘1990இல் தமிழ்ப் பாசிசத்தால் கொன்று புதைக்கப்பட்ட படுகொலைகளில் இருந்து ஒரு கொலை விவரணத்தை பலமான தரவுகளோடு எஸ்.எம்.எம். பஷீர் முன்வைப்பதை நூலாக்குவதற்கு காலம் கனிந்ததை கனத்த சுசப்பின் மிச்சத்தோடு இங்கு பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது. கேள்விக்கிடமற்ற விசுவாசத்தினதும் வழிபாட்டினதும் துதிப்பாடற் பாராயணத்தினதும் நிலை கடைசியில் எங்கு எல்லோரையும் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என்பதை இந்நூல் சிறப்பாக முன்வைக்கிறது’ (சுகன்-முகவுரையில்). 1990 ஜுன் 12ஆம் திகதி கிழக்கில் காத்தான்குடியூடாகப் பயணித்த பயணிகள் பேருந்து குருக்கள் மடம் என்ற இடத்தில் தாக்குதலுக்குள்ளாகி 69 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வரலாற்றுப் பதிவு இதுவாகும். 2014இல் தேனீ.கொம், சலசலப்பு.கொம், காத்தான்குடி இன்போ ஆகிய வலைத்தளங்களில் தொடராக வெளிவந்திருந்த இத்தொடர் புதிதாகச் சேர்க்கப்பட்ட முடிவுரையுடன் நூலுருவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. உள்;ர் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இப்புதைகுழியின் அகழ்வுப் பணிகளுக்கு இன்றளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் பற்றியும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்