செ.அரியநாதன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2011. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(6), 39 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-2140-3.
எஸ்.கொடகே வெளியீட்டு நிறுவனத்தின் ‘நித்திலத்தின் இரத்தினங்கள்’ என்ற தொடரில் முதலாவது பிரசுரமாக வெளிவந்துள்ள நூல் இது. விடுதலைப் போரின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட யூலை 2009இன் பின்னர், ‘இனங்களுக்கிடையே நாட்டில் ஏற்படத் தொடங்கிவிட்டதாகக் கருதிய’ தென்னிலங்கை புத்திஜீவிகள் நல்லெண்ணம், சகோதரத்துவம் ஆகியவற்றை பலப்படுத்தும் செயற்பாடாக வெளியிட்ட பிரசுரம் இது. சஞ்சிகைகளில், பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள், பண்டாரநாயக்க நூதனசாலையில் பெறப்பட்ட விபரங்கள், பல்வேறு நூல்களிலும் வெளியான தகவல்கள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்நூலுக்கான அனுசரணையை கொடகே பதிப்பகத்தின் உரிமையாளர் தேசபந்து சிரிசுமன கொடகே ஏற்றுள்ளார். நூலாசிரியரின் குறிப்பில் ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின்னணியில் ‘தமிழரின் தவப்பயனாய் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க நம் நாட்டின் பிரதமரானார். 1964ஆம் ஆண்டில் 9,75,000 தமிழர்களின் தீராப் பிரச்சினை தீர்த்தவைக்கப்பட்டது. (தமிழர்) நன்றிப் பெருமூச்சு விட்டனர், பிரஜா உரிமை பெறப்போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன், உணர்வுடன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.