அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: நூலாசிரியர், 1வது பதிப்பு, ஜுலை 1981. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ பார்வதி அச்சகம், 536, ஆஸ்பத்திரி வீதி).
24 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21×14.5 சமீ.
1981இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச வன்முறைகளின் பதிவாக இச் சிறுநூல் அமைகின்றது. பயங்கர இரவு-முதலாம் நாள், இரண்டாம் நாள்-இன்னொரு பயங்கர நாள், அவசரகால நிலையும் அதன் தொடர்ச்சிகளும், அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்தல், யாழ்ப்பாணத்தை எரித்தவர்கள், தேர்தல் முடிவுகளும் பின்னரும், படிப்பினைகள் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வீரகேசரி (13), தினபதி (1), சுதந்திரன் (1), ஈழநாடு (1) ஆகிய பத்திரிகைச் செய்திகளையும், நான்கு பாராளுமன்ற ஹன்சார்ட் பதிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது.