17956 இலங்கை மலையகத் தமிழ் மக்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள் (இரு நூல்களின் தொகுப்பு).

பி.ஏ.காதர் (ஆங்கில மூலம்), கமலாலயன் (தமிழாக் கம்). ஐக்கிய இராச்சியம்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம் லண்டன், 1வது பதிப்பு, பெப்ரவரி 2023. (சென்னை 600 077: மணி ஆப்செட்).

232 பக்கம், விலை: ரூபா 1400., இந்திய ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.

மலையகத் தமிழர்-இந்தியத் தமிழர்-மலைநாட்டுத் தமிழர் என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு சமூகம் பற்றிய கதை இது. முன்னர் ‘சிலோன்’ என்றழைக்கப்பட்ட இலங்கைக்கு 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் கோப்பித் தோட்டங்களிலும் பின்னர் தேயிலை றப்பர் தோட்டங்களிலும் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்களின் சந்ததியினராவர். இவர்களில் சிலர் வர்த்தகர்களாகவும் ஏனைய சேவைகள் வழங்குவோராகவும் சுயமாக வந்தவர்கள். இலங்கை நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே மிகவும் சுரண்டப்படுகின்ற துன்புறுத்தப்படுகின்ற மக்கள் பிரிவினர் இவர்களே என்பதை இந்நூல் உணர்த்தும். இலங்கை நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்கள் மலையகத் தமிழர்கள். ஆனால் இந்திய விஸ்தரிப்பின் மறைவான பாதங்கள் என இலங்கையின் தீவிர பேரினவாதிகளால் அவர்கள் முத்திரை குத்தப்பட்டனர். மலையகத் தமிழர் தமது வரலாறு முழுவதும் எவ்வாறு அரசாங்கங்களால் நடத்தப்பட்டுள்ளார்கள் என்பதை சொல்வதே இந்த நூலின் நோக்கமாகும். ‘இலங்கை மலையகத் தமிழர்: மறுக்கப்பட்ட மக்களா அல்லது அபாயத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சமூகமா?’, ‘இலங்கை-ஜுலை 1983: இலங்கைத் தமிழருக்கு எதிரான வன்முறை’ ஆகிய இரண்டு ஆங்கில நூல்களினதும் தமிழாக்கமாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Big-bang Idea: Evolution in our Market

Content Green Lantern Greatest Starter — Hot Better Dance Performance in the a sounds Best Totally free Sounds Enjoy Greatest Example in the Colorado’s Ways