17957 இலங்கை முஸ்லீம்களின் தேசிய பங்களிப்பு: நினைவுக்கெட்டிய காலம் முதல் சுதந்திரம் வரை: பாகம் 01.

றவூப் ஸெய்ன். திஹாரிய: சமூக விஞ்ஞானங்களுக்கான இப்னு கல்தூன் ஆய்வகம், 2வது பதிப்பு, மே 2023, 1வது பதிப்ப விபரம் தரப்படவில்லை. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ், 30/7, 5ஆவது ஒழுங்கை, அம்பகஹபுர).

300 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1200., அளவு: 21.5×14.5 சமீ.

தேர்ந்த தகவல்களின் வரிசைமூலம் திரளும் கருதுகோள்களும் சிந்தனைகளும் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் புள்ளிகளை இனங்காட்ட உதவும் என்ற நம்பிக்கையிலிருந்து எழுதப்பட்ட நூல் இதுவாகும். இலங்கை முஸ்லீம்கள் இந்நாட்டில் ஏறக்குறைய ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். சமகால உலகில் சுமார் நூறு கோடி முஸ்லிம் மக்கள் 137 நாடுகளில் வாழ்ந்துவருகின்றனர். உலக சிறுபான்மைகளில் இலங்கை முஸ்லிம்கள் முற்றிலும் வித்தியாசமான பண்பாட்டுக் கூறுகளையும் தனித்துவங்களையும் கொண்டவர்கள் எனக்கூறும் நூலாசிரியர், இந்நூலில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரத்துறைப் பங்களிப்பு, தேசிய இறைமை மற்றும் பாதுகாப்புத் துறையில் முஸ்லிம் பங்களிப்பு, அரசியல் பங்கேற்பும் பங்களிப்பும், இலங்கை முஸ்லிம்களின் மருத்துவத்துறைப் பங்களிப்பு, சமய, கலாசார துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்கேற்பும் பங்களிப்பும் ஆகிய ஆறு இயல்களின் வழியாகத் தனது கருத்துக்களை வரலாற்று ஆய்வுரீதியாக முன்வைத்திருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71439).

ஏனைய பதிவுகள்

Munchers Online Spilleautomat

Content Lights online slot: Top 5 Nextgen Gaming Casinos When Was The Nextgen Established? Weitere Nextgen Gaming Spiele Entdecken Leve op til Tilslutte Slots From