எம்.வாமதேவன் (மூலம்), பொன்.இராமதாஸ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 8: எம்.வாமதேவன், BQ 2/2, மெனிங் டவுண், மங்கலா வீதி, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 160 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-93210-1-4.
மலையகத் தமிழ்ச் சமூகத்திற்கு காணி உரிமை இன்றியமையாதது என்னும் அடிப்படைப் புரிதலைத் தாண்டி அதனை நடைமுறையில் சாத்தியப்படுத்திக் கொள்வதில் உள்ள சவால்களை, சாத்தியங்களை ஆழமாக அறிந்துகொள்ளவேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. திரு. வாமதேவனின் இந்நூல் இவ்வகையில் காலத்துக்கேற்ப வெளிவரும் ஒரு முக்கியமான ஆய்வு நூலாகின்றது. மேலோட்டமான புரிதல்களிலிருந்து இப்பிரச்சினையின் ஆழமான விடயங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கு ஆசிரியர் முன்வந்திருப்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும். அறிமுகம், தொழிலாளர் வருகையும் சமூக உருவாக்கமும், நிலவுரிமை பற்றிய ஆய்வுகள், நிலவுரிமை பற்றிய மக்களின் பார்வை, நிலவுரிமையை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் சவால்களும் சாத்தியங்களும், தோட்டத் தொழிலாளர்கள் சிற்றுடைமையாளர்களாக மாறுதல், அரசியல் அந்தஸ்துக்கான அடிப்படையான நிலவுரிமை, நிலவுரிமையை நிலைநிறுத்திக் கொள்ளல் ஆகிய 8 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் எம்.வாமதேவன், மலையகத்தின் மூத்த கல்விமான்களுள் ஒருவர். அமைச்சு செயலாளராகவும், நிதி ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். திட்டமிடல்துறையில் ஆசிரியருக்கு இருக்கும் வளமான அனுபவத்தின் வெளிப்பாடாக இந்நூல் அமைந்துள்ளது.