நாகலிங்கம் அன்னராசா. ஜேர்மனி: நாகலிங்கம் அன்னராசா, Goslar Str. 45, 44359, Dortmund, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).
4+89+14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
இந்நூலில் வாழ்த்துரை, சிறப்புரை, முன்னுரை ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழ் மக்கள் வரவு, இந்து சமய வளர்ச்சி, தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சி, தமிழ் மக்களின் சஞ்சிகைகள், தமிழ் மக்களின் வியாபார ஸ்தாபனங்கள், தமிழ் மக்களின் கலாச்சார நிகழ்வுகள், தமிழ் மக்களின் விளையாட்டுத்துறை, தமிழ் மக்களின் தமிழீழ நிகழ்வுகள், தமிழ் மக்களின் கலை வளர்ச்சி, இந்நகரில் நாமும் ஜேர்மனியரும், தமிழ் மக்களின் நாகரீகம், தமிழ் மக்களின் விருந்தோம்பல், தமிழ் மக்களின் பொருளாதாரம், தமிழ் மக்களின் வணிகம், தமிழ் மக்களின் ஆடை அணிகலன், தமிழ் மக்களின் நேசக்கரம், தமிழ் மக்களின் தொழிற்பாடுகள், தமிழ் மக்களின் சுகாதார வழிகாட்டல், தமிழ் மக்களின் சமயச் சடங்குகள், தமிழ் மக்களின் பொழுதுபோக்கு, தமிழ் மக்களின் பண்பாடு, தமிழ் மக்களும் சமயமும், தமிழ் மக்களின் கல்வி, தமிழ் மக்களின் ஆரம்ப வாழ்க்கை, டோட்முண்ட் நகரமும் நாமும், நம் மூதாதையர் கொள்கைகள், டோட்முண்டில் நடந்த இன்பங்களும் துன்பங்களும், டோட்முண்ட்டில் பொழுதுபோக்கு இடங்களில் சில, நூலாசிரியரின் இதயபூர்வமான வாழ்த்துக்கள், இந்நூலாசிரியர் பற்றி, நம்மவரிடையே பவனிவரும் அர்த்தமுள்ள பழமொழிகள், அர்த்தமுள்ள தத்துவமான பொன்மொழிகள், நாம் வாழும் கிராமம் டோட்முண்ட் மென்கெட, இந்நூலாசிரியரின் முடிவுரை, டோட்முண்ட் பற்றிய ஒரு பார்வை ஆகிய தலைப்புகளில் ஜேர்மனி டோர்ட்முண்டில் தமிழர் வரலாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி கிராமத்தைச் சேர்ந்தவர். ‘கலைமகள் அறிவகம்’ என்னும் தனியார் கல்வி நிலையமொன்றை நடத்தியவர். மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தராக சிலகாலம் பணியாற்றயவர். பின்னர் அச்சுவேலியில் கூட்டுறவுத் துறையில் இலிகிதராகப் பணியாற்றி, பின்னர் கூட்டுறவுப் பரிசோதகராகவும் செயற்பட்டவர்.