17971 கிளிநொச்சி மாவட்ட தொன்மையின் மூலங்கள்.

றூ. கேதீஸ்வரன், மா.அருள்சந்திரன் (பதிப்பாசிரியர்கள்). கிளிநொச்சி: மாவட்டச் செயலகமும் பண்பாட்டுப் பேரவையும், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). 

(38), 484 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-955-760-900-3.

இந்நூலில் வாழ்த்துச் செய்திகள், பண்பாட்டியல், தொன்மை வரலாற்றியல், தற்கால வரலாற்றியல், ஆக்க இலக்கியம், அழகியல், சமூக வழக்காற்றியல் ஆகிய பிரிவுகளின்கீழ் ஆக்கங்கள் வகுத்துத் தரப்பட்டுள்ளன. இவ்வாக்கங்களின் வழியாக கிளிநெச்சி மாவட்டத் தொன்மை வரலாறு, பண்பாடு, நிர்வாகம், ஊர்ப்பெயர் வரலாறு, நிலவளம், நீர்வளம், வனவளம், குடியிருப்பு ஆகிய விபரங்கள் விரிவான 38 கட்டுரைகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. ‘பண்பாட்டியல்’ என்ற முதலாவது கட்டுரைப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தின் வளங்களும் வழமைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமிய வழிபாட்டுச் சடங்குகள், கிளிநொச்சி மாவட்டத்தில் கத்தோலிக்க திருச்சபை சில வரலாற்றுக் குறிப்புகள், கிளிநொச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி, கரைச்சிப் பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் வழிபாட்டுத் தலங்கள் பற்றிய ஓர் அறிமுகம், கண்டாவளைப் பிரதேச வணக்கஸ்தலங்கள் ஓர் அறிமுகம், பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் ஆலயங்களும் வழிபாட்டு மரபுகளும்-ஓர் நோக்கு, பூநகரிப் பிரதேசத்து இந்து ஆலயங்களும் வழிபாட்டு மரபுகளும் ஒரு நோக்கு, கண்டாவளைப் பிரதேச மக்களின் பண்பாட்டு விழுமியங்கள் ஆகிய ஆக்கங்களும், ‘தொன்மை வரலாற்றியல்’ என்ற பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூர்வீக மக்களும் பண்பாடும்-தொல்லியல் வரலாற்று நோக்கு, கிளிநொச்சியின் பண்பாட்டுத் தொன்மையும் தொல்லியல் மூலங்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் குடித்தொகை வளர்ச்சியும் போக்கும், காலனித்துவ ஆதிக்கப் படர்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், பரந்தன் பிரதேசங்களில் உள்ளடங்கும் கிராமங்களின் வரலாறு, ஈழத்து சைவச் செல்நெறியில் உருத்திரபுரம் சிவன்கோவில் ஆகிய ஆக்கங்களும், ‘தற்கால வரலாற்றியல்’ என்ற பிரிவில், கிளிநொச்சி மாவட்ட குடியேற்றத் திட்டங்களின் வரலாறும் வாழ்வியலும், 1984ஆம் ஆண்டின் பின்னரான கிளிநொச்சி மாவட்ட நிர்வாக வளர்ச்சியின் நோக்கு, கிளிநொச்சி மாவட்டக் கல்வி வரலாறு, பூநகரி பிரதேச தொன்மைக் கல்வி வரலாறு, வரலாற்று நோக்கில் கிளிநொச்சி மாவட்ட உள்;ராட்சிப் பதிவுகள், கூட்டுறவும் கிளிநொச்சி மாவட்டமும் ஆகிய ஆக்கங்களும், ‘ஆக்க இலக்கியம்’ என்ற பிரிவில், கிளிநொச்சி மாவட்டத்தின் கவிதை வளர்ச்சிப் போக்கு, கிளிநொச்சி மாவட்டத் தமிழ் நாவல்கள், கிளிநொச்சியில் சிறுகதை முயற்சிகள், கிளிநொச்சியில் ஊடக இதழியல்துறை ஒரு நோக்கு ஆகிய ஆக்கங்களும், ‘அழகியல்’ என்ற பிரிவில் மரபுவழிப் பாரம்பரியங்களும் அரங்கேற்ற முறைமைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன நாடகங்களும் அதன் போக்குகளும், கிளிநொச்சி மாவட்ட அழகியற்கலை வளர்ச்சி, மக்கள் பேணும் மரபுகள் ஆகிய ஆக்கங்களும், ‘சமூக வழக்காற்றியல்’ என்ற பிரிவில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஊர்ப் பெயர்களில் மூலிகைத் தாவரங்கள்-ஓர் ஆய்வு, வேட்டை, பூநகரிப் பிரதேச நீர்வளம், கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை மிக்க பாரம்பரிய வைத்தியசேவை, தமிழரின் சமூக வழக்கில் குறியீடுகளின் தொன்மையும் தொடர்ச்சியும், கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் தந்திரோபாயம், கிளிநொச்சி மாவட்டத்தில் ஊரும் பெயரும், பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் கிராமங்கள் சிலவும் அதன் வளங்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்றத்தின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்