அலெக்சாண்டர் கப்புகொட்டுவ (சிங்கள மூலம்), ஜனரஞ்சனி தனபாலன் (தமிழாக்கம்). கொழும்பு: வெளியீட்டுப் பிரிவு, மத்திய கலாசார நிதியம், உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 7: மத்திய கொழும்பு கலாசார நிதிய அச்சகம், 11, சுதந்திர அவென்யு).
vii, 40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 90., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-613-340-8.
இலங்கையின் கலாசாரம் மற்றும் தொல்பொருளியல் ரீதியான மரபுரிமைகளை எடுத்துக்கூறும் இடங்கள் தொடர்பான தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்காக இந்நூல் தொடர் எழுதப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டம் பற்றிய அறிமுகம், கேகாலை மாவட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் இந்நூல் கேகாலை மாவட்டத்தின் மரபுரிமைச் சின்னங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை வழங்குகின்றது. இம்மாவட்டத்தின் மரபுரிமைச் சின்னங்களாக தொறவக்க கற்குகை, பெலிகல ரஜமகா விகாரை, வட்டாரம் ரஜமகா விகாரை, தெதிகம கொட்ட விகாரை, மெணிக் கடவர போர்த்துக்கேயர் கோட்டை, மாவனெல்ல புராதன பாலம், தெலிவல கொட்ட விகாரை, பின்னவல யானைகள் சரணாலயமும் திறந்தவெளி மிருகக்காட்சிசாலையும், தெவனகல ரஜமகா விகாரை, அளுத்நுவர தேவாலயமும் கிருவா சத்திரமும், தனகிரிகல ரஜமகா விகாரை, லெவ்கே வளவும் டெம்பிட்ட விகாரையும், செலவ ரஜமகா விகாரை, வாக்கிரிகல சிதைவுகளும் சத்திரமும், கனேகொட புராண குகை விகாரை, ருவான்வெல்ல பிரித்தானிய கோட்டையும் ஜுபிளி சத்திரமும், நிக்கவலமுல்ல வரலாற்றுச் சிறப்புமிக்க மண்ணாலான ஓடமயானம், பெத்தன்கொட வரலாற்றுச் சிறப்புமிக்க பூங்கா, பெரெண்டி கோயில், கித்துல்கல, பெலிலென குகை ஆகிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி அறிவிற்கான புத்தகம் என்ற தொடரில் இது வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71587).