சூலனி ரம்புக்வெல்ல (சிங்கள மூலம்), ஜனரஞ்சனி தனபாலன் (தமிழாக்கம்). கொழும்பு: வெளியீட்டுப் பிரிவு, மத்திய கலாசார நிதியம், உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 7: மத்திய கொழும்பு கலாசார நிதிய அச்சகம், 11, சுதந்திர அவென்யு).
vii, 33 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 80., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-613-342-4.
இலங்கையின் கலாசாரம் மற்றும் தொல்பொருளியல் ரீதியான மரபுரிமைகளை எடுத்துக்கூறும் இடங்கள் தொடர்பான தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்காக இந்நூல் தொடர் எழுதப்பட்டுள்ளது. பதுளை மாவட்டம், பதுளை மாவட்ட நிர்வாகம், வரலாற்றுப் பின்னணியும் இடங்களும் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்நூல் பதுளை மாவட்டத்தின் மரபுரிமைச் சின்னங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை வழங்குகின்றது. பதுளை மாவட்டத்தின் மரபுரிமைச் சின்னங்களாக ராவணா எல்ல கற்குகை, ராவணா எல்ல குகை விகாரை, மஹியங்கனைத் தூபி, முத்தியங்கனைத் தூபி, சென்சுன்கல், மாவராகல ஆரண்ய சேனை ஆச்சிரமம், பல்லாவித்த வாவி, நாகதீப விகாரை, ஹல்தும்முல்ல, தோவ விகாரை, போகொட மரப்பாலமும் ரஜமகா விகாரையும், எல்ல பிரதேசத்திலுள்ள தொல்பொருளியல் சார்ந்த வரலாற்று இடங்கள், அரைவட்ட வடிவ பாலம், பம்பரகந்த நீர்வீழ்ச்சி, தியலும நீர்வீழ்ச்சி, தியத்தலாவ, வெலிமடை, ஹல்பே பத்தினித் தேவாலயம், கொஸ்லந்தை புராண விகாரை, கெப்பெட்டிப்பொல புராதன கோட்டை, பதுளை புகையிரத நிலையம், இந்து கத்தோலிக்க மதத் தலங்கள், தம்பான ஆகிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கல்வி அறிவிற்கான புத்தகம் என்ற தொடரில் 19ஆவது நூலாக இது வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71588).