சயனொளிபவன் முகுந்தன். யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழியற் கழகம், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 3வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, 1884, 2வது பதிப்பு, 1916. (யாழ்ப்பாணம்: மிக்கி பிரின்டிங் ஸ்பெஷலிஸ்ட், தபாற்பெட்டிச் சந்தி, பலாலி வீதி, திருநெல்வேலி).
xxiv, 92 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-6211-00-4.
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றை மரபுவழி நின்று தொன்மங்கள் மற்றும் செவிவழி ஐதீகங்க;டாகப் பேச முற்பட்ட நூல்களாக யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமாலை, வையாபாடல் ஆகியன அமைகின்றன. இவற்றுள் கைலாய மாலை, வையாபாடல் ஆகியன யாழ்ப்பாண வைபவ மாலையை இயற்றுவதற்குத் துணைசெய்தனவாக அறியப்படுகின்றன. யாழ்ப்பாண வைபவ மாலையினை முன்னிறுத்தி அப்பனுவல் குறிப்பிடும் கருத்துக்களைப் புதுக்கியும் விரித்தும் சுருக்கியும் எழுந்த பனுவல்களாக யாழ்ப்பாண வைபவம், யாழ்ப்பாண வைபவ விமர்சனம், யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகியன விளங்குகின்றன. யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய வரலாற்று வரைபுகளுள் யாழ்ப்பாண வைபவம் என்ற பெயரில் அமைந்த இருவேறு நூல்களும் இடம்பெறுகின்றன. அவை இரண்டும் ஆசிரியர் பெயர் அறியா நிலையிவேலயே கிடைக்கின்றன. அவை எவ்வெக் காலத்தில் எழுதப்பட்டன என்பதும் தெளிவாக அறியக்கூடியதாக இல்லை. யாழ்ப்பாண வைபவம் பிரதியொன்றை வே.சதாசிவம்பிள்ளை அவர்கள் முதன்முதல் பரிசோதித்து 1884இல் வெளியிட்டார். மற்றைய பிரதி பிரம்மஸ்ரீ சி.பாலசுப்பிரமணிய சர்மா அவர்களால் பரிசோதிக்கப்பட்டு 1916இல் வெளியானது. இதன் மூன்றாவது பதிப்பு தற்போது இலங்கைத் தமிழியற் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கலாநிதி சயனொளிபவன் முகுந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறைத் தலைவராவார்.