17982 வரலாற்றில் காரைநகர்.

எஸ்.கே.சதாசிவம். காரைநகர்: எஸ்.கே.சதாசிவம், இடைப்பிட்டி, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: ஈஸ்வா டிஜிட்டல் அச்சகம்).

329 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 25×17 சமீ., ஐளுடீN: 978-624-94610-0-0.

இந்நூல் ஒன்பது பிரதான அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. முதலாவது அத்தியாயத்தில், வரலாற்று நூல்களில் காரைநகர், காரைநகரில் உள்ள குறிச்சிகளின் பெயர் என்பனவும் இரண்டாவது அத்தியாயத்தில் நிர்வாகக் கட்டமைப்பு, உள்;ராட்சி நிர்வாகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், சட்டசபை, பாராளுமன்றத் தேர்தல்கள் என்பனவும், ‘பொருளாதாரப் பண்பாட்டு வளர்ச்சி’ என்ற மூன்றாவது அத்தியாயத்தில் காரைநகர் அபிவிருத்தியில் மலாய் நாட்டுக்குப் புலம்பெயர்வும் அவர்தம் பங்களிப்பும், காரைநகர் மக்களின் இடப்பெயர்வு, புலப்பெயர்வு வாழ்வும் வளமும், காரைநகர் மக்களின் இடப்பெயர்வும் கல்வியும் என்பனவும், ‘கல்வியும் மேன்மையும்’ என்ற நான்காவது அத்தியாயத்தில் திண்ணைப் பாடசாலைகள், காரைநகர் கல்வியில் அமெரிக்கன் இலங்கை மிஷனரிமாரின் வகிபாகம், சைவசமயச் சூழலில் கற்க பணி செய்தோர், பாடசாலைகளின் வரலாறு, வர்தாக் கல்வித் திட்டம் என்பனவும், ‘பௌதிக பண்பாட்டு வளங்கள்’ என்ற ஐந்தாவது  அத்தியாயத்தில் குளங்கள், நீர்வளமும் குடிநீர் விநியோகமும், பனைசார் செயற்பாடுகள், பிரதேச வைத்தியசாலை, விளையாட்டுத் துறை, என்பனவும், ‘போக்குவரத்து முறைமைகள்’ என்ற ஆறாவது அத்தியாயத்தில் காரைநகர் பொன்னாலை தாம்போதி, இலங்கை போக்குவரத்து சபை பேருந்துசாலை, காரைநகர் துறைமுகம் என்பனவும், ‘வளர்ச்சிப் பாதையில்’ என்ற ஏழாவது அத்தியாயத்தில் இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை தொழிற்பயிற்சி நிலையம், வாரிவளவு நல்லியக்க சபை என்பனவும், எட்டாவது அத்தியாயத்தில் மாண்புறு எழுத்தாளர்களும் அவர்தம் நூல்களும் என்ற உபதலைப்பின் கீழும், ‘வரலாற்றுச் சுவடுகள்’ என்ற ஒன்பதாவது அத்தியாயத்தில் கலங்கரை விளக்கம், கோவளம் வெளிச்சவீடு, கோவளம், வேணன் அணைக்கட்டு, காரைநகரின் தொன்மையின் அடையாளங்கள், காரைநகரின் தொன்மைமிகு படங்கள், காரைநகரில் உள்ள குளங்கள் (படங்கள்) ஆகிய உபதலைப்புகளின் கீழ் காரைநகரின் வரலாறு விளக்கமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக பாடசாலைகளில் கடமைபுரிந்த அதிபர்கள், உசாத்துணை நூல்கள், நூலாக்கத்திற்கு தகவல்கள் சேகரித்த அலுவலகங்கள், நூலாக்கத்திற்கு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டவர்கள் ஆகிய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன. திரு. கந்தையா சதாசிவம் கல்விக்கட்டமைப்பில் இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

100 percent free Slots

Posts Slots online | Form of Slot Game You could potentially Enjoy On line Best Real cash Casinos on the internet Because of the Added