17985 திருவுடையாள்: பிரதேச மலர் 2007.

தம்பிஐயா கலாமணி, கிருஷ்ணபிள்ளை நடராசா (தொகுப்பாசிரியர்கள்). கரவெட்டி: கரவெட்டி பிரதேச கலாசாரப் பேரவை, வடமராட்சி தெற்கு மேற்கு, பிரதேச செயலகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (யாழ்ப்பாணம்: தமிழ்ப் பூங்கா அச்சகம், பிரதான வீதி, நெல்லியடி, கரவெட்டி).

x, 306 பக்கம், ஒளிப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

வாழ்த்துச் செய்திகள், ஆசியுரைகளைத் தொடர்ந்து இவ்வாண்டிதழில் வடமராட்சியின் இடப்பெயர்களும் வரலாற்று வரைபும்: ஓர் அறிமுக ஆய்வு (செல்லையா கிருஷ்ணராசா), வடமராட்சிப் பிரதேசத்தின் அபிவிருத்தித் திறமுறைகள் (பொ. பாலசுந்தரம்பிள்ளை), சூழல் பாதுகாப்பை வேண்டிநிற்கும் தொண்டைமானாறு ஏரிக்கரை கிராமங்கள்: ஒரு கண்ணோட்டம் (மு.கந்தசாமி), வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச கல்வி நிலை (க.அம்பலவாணர்), சர்வதேச மகப்பேற்றியல் நிபுணர் டாக்டர் சிவா சின்னத்தம்பி (வே.சிவசிதம்பரம்), சர்வதேச வங்கியியலாளர் செல்லையா லோகநாதன் (வீ.க.சண்முகநாதன்), சட்டமேதை ஜீ.ஜீ.பொன்னம்பலம் (இ.எ.ஆனந்தராசா), உழைப்பால் உயர்ந்த ஆறுமுகம் அருள்பிரகாசம் (கா.நீலகண்டன்), அணு ஆராய்ச்சி விஞ்ஞானி பேராசிரியர் கந்தையா O.B.E (க.தர்லிங்கம்), சமூக மேம்பாட்டின் சிற்பி அமரர் பொன்னம்பலம் கந்தையா (செல்லத்துரை சேதுராஜா), கணித மேதை பேராசிரியர் C. J எலியேசர் (கி.செல்வராசா), Publications of Prof.C.Eliezer, பண்டிதர் க.வீரகத்தி (செல்வி கல்யாணி நமசிவாயம்), உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் (க.சி.குலரத்தினம்), அல்வாயூர் கவிஞர் மு.செல்வையா (தெணியான்), தொல்காப்பியத்தில் யாப்பும் அணியும் (க.அருணாசலம்), இருக்கிறது இந்த வயல் (த.ஜெயசீலன்), உலகளாவிய செல்நெறியும் கற்றலும் (மா.கருணாநிதி), இலங்கைத் திறனாய்வு வளர்ச்சி (துரை. மனோகரன்), ஒளிப்பிழம்பை வினாவுதல் (த.அஜந்தகுமார்), Pசழகநளளழச யு.ஏநடரிpடைடயi, ‘என்ரை ….’(குப்பிழான் ஐ.சண்முகன்), சர்வதேச நாணய நிதியமும் நாணய மாற்றுவீத முகாமையும் ஒரு வரலாற்று ரீதியான பார்வை (த.இராஜேஸ்வரன்), கருத்துநிலை – சமூகம் – இலக்கியம் (செல்லத்துரை சுதர்சன்), முனிவரர் பெருவலி (க.முத்துவேலு), ‘சிதறுண்ட விம்பங்களாய் ….’ (இ.இராஜேஸ்கண்ணன்), யாழ் மாவட்டத்தில் தொற்று நோய்களின் பரம்பல் ஒரு கண்ணோட்டம் (ஆ.கேதீஸ்வரன்), நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் முயற்சிகளுக்குப் பின்னணியாய் இருந்து அவற்றை நெறிப்படுத்திவரும் தத்துவங்கள் (பூ.சோதிநாதன்), வண்ணத்துப்பூச்சிகள் (சு.குணேஸ்வரன்), கந்தர்சஷ்டி கவசத்தின் சமூக உள்ளடக்கம் (வ.மகேஸ்வரன்), கொஞ்சம் புரிந்துகொள்ளுங்களேன் (கொற்றை பி.கிருஷ்ணானந்தன்), அப்பர் தேவாரம் ஓர் அறிமுகம் (திருமதி விக்னேஸ்வரி பவநேசன்), புலம் பெயர்தல் (கல்வயல் வே.குமாரசாமி), ‘பிரிந்தவர் கூடினால் …’ (சோ.பத்மநாதன்), ‘வஞ்சமிலா இனம் வேண்டும் ….’(த.கலாமணி), வடமராட்சி தெற்கு கலாசாரப் பேரவையினால் கௌரவிக்கப்பட்ட கலைஞர்களின் விபரம் (செல்வி சே.செல்வசுகுணா), பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் – 2006-2007, பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் – 2006-2007, அபிவிருத்தித் திட்டம் – 2006-2007, வடக்கு கிழக்கு நீர்ப்பாசனத் திட்டம்- NEIAP, வடக்கு கிழக்கு சமுதாய அபிவிருத்தி திட்டம்- NECORD சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் வேலைத்திட்டங்கள் ஆகிய ஆக்கங்களும் அறிக்கைகளும் இம்மலரில் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11850).

ஏனைய பதிவுகள்