சு.குணேஸ்வரன், ஹ.காயத்திரி (இணை இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பிரதேச பண்பாட்டுப் பேரவை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம், கரவெட்டி, 1வது பதிப்பு, மார்கழி 2022. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா அச்சகம், பிரதான வீதி, நெல்லியடி).
xvi, 131 பக்கம், தகடுகள், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.
2022-2023இற்குரிய இவ்வாண்டிதழில் ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், விருதுபெறும் கலைஞர் விபரம், பண்பாட்டுப் பேரவை மற்றும் பிரதேச செயலக நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் என்பனவற்றைத் தொடர்ந்து பிரதேசம் சார்ந்த பத்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவை காவோலை முள்மிடை வேலி (மனோன்மணி சண்முகதாஸ்), வடமராட்சிப் பிரதேசத்துக்கு பெருமை சேர்க்கும் இரு கவிதைத் தொகுப்புகள் (செ.யோகராசா), கவிஞர் மு.செல்லையா: காந்தீயத்தால் உடன்படு சமநிலை கண்ட தலைச்சன் (இ.இராஜேஸ்கண்ணன்), கரவையின் கவி ஊற்றான கரவை கிழார் கவிதைகள் (வேல்.நந்தகுமார்), மூலிகை விவசாய மேம்பாடு பற்றிய கண்ணோட்டம் (எஸ்.யோகேந்திரன்), தச்சன் தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலய வரலாறு (க.ஆனந்தக் குமாரசுவாமி), கரவெட்டிப் பிரதேசத்தின் செவ்வாச்சி வழிபாடு (சிவரூபன் நிஜிதா), வரலாற்றில் இமையாணன் (கே.எம்.செல்வதாஸ்), செல்வச் சந்நிதியும் சித்தர்களும் ஓர் ஆரம்ப உசாவல் (சு.குணேஸ்வரன்), வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளரின் நிர்வாகக் கூட்டறிக்கை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.