அ.சிவஞானசீலன் (தொகுப்பாசிரியர்). நெடுந்தீவு: பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும், 1வது பதிப்பு, 2023. (யாழ்ப்பாணம்: தமிழ்ப் பூங்கா அச்சகம், பிரதான வீதி, நெல்லியடி, கரவெட்டி).
xiii, 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ., ISBN: 978-624-6571-00-9.
நெடுந்தீவு, பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து வெளியிட்டுள்ள பிரதேசச் சிறப்புமலர் இதுவாகும். நெடுந்தீவு தொடர்பான கள ஆய்வுப் பணிகளின்போது பெறப்பட்ட வாய்மொழி வழக்காற்று அம்சங்கள் சிலவற்றைத் தொகுத்துத் தரும் முயற்சி இதுவாகும். இந்த நூலில் தாலாட்டு முதல் ஒப்பாரி வரையான பாடல்கள், கதைகள், பழமொழிகள், உவமைத் தொடர்கள், சிறப்பு வழக்குகள், வழக்குச் சொற்கள், முதலான நெடுந்தீவின் வாய்மொழி வழக்காற்று அம்சங்களும், அதனோடு தொடர்புடைய சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகளுடன் வெளிவந்துள்ள இம்மலரின் முதலாம் பகுதியில் வாய்மொழிப் பாடல்கள், நெடுந்தீவுக் கதைகள், பழமொழிகள், சிறப்பு வழக்குகள், வழக்குச் சொற்கள் ஆகிய விடயங்களும், இரண்டாவது பகுதியில், நெடுந்தீவு வாழ்வியலில் வாய்மொழி வழக்காறுகள், நாட்டார் பாடல்கள், நாட்டார் வழக்காற்றில் கொத்தித் தெய்வம், நாட்டார் மரபில் பெரிய எழுத்துப் பொஸ்தகங்கள் ஆகிய தலைப்புகளிலான ஆக்கங்களும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.