மலர் ஆக்கக் குழு. யாழ்ப்பாணம்: பிரதேச பண்பாட்டுப் பேரவை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை, கரவெட்டி, 1வது பதிப்பு, ஐப்பசி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
xvii, 18-204 பக்கம், தகடுகள், ஒளிப்படங்கள், விலை: ரூபா 2000., அளவு: 26×18.5சமீ., ISBN: 978-624-6502-00-3.
இம்மலர் கரவெட்டிப் பிரதேசத்தின் சமூகம், பொருளாதாரம், அரசியல், கலை போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகவும் இப்பிரதேசத்தின் விரிவான வரலாற்றுத் தகவல்களை கொண்டதாகவும் அமையப்பெற்றுள்ளது. தேசிய வாசிப்பு மாதத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வில் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள், கலைஞர்கள் உட்பட எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்ட பலரும் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கான களமாக இம்மலர் அமைந்துள்ளது. மலர் ஆக்கக் குழுவில் கணேசன் கம்ஸநாதன் (மலர்க்குழுத் தலைவர்), கி.நடராசா, சி.விஜயகுமார், இ.இராஜேஸ்கண்ணன், அ.பௌநந்தி, த.அஜந்தகுமார், தி.திருச்செந்தூரன், க.பரணீதரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் செயற் கருமங்கள் நிலைபேறான அபிவிருத்தி நோக்கிய வடமராட்சிப் பிரதேசத்தின் சவால்கள் (பா.நிமலதாசன்), நகர அபிவிருத்தி அதிகார சபை (டி.பி.எஸ்.கே.திசாநாயக்க), முன்பள்ளி கல்வியின் முனைப்பு (அ.பௌநந்தி), வடமராட்சியில் முதலாவது சட்ட மன்ற உறுப்பினர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஒரு பன்முகப் பார்வை (சி.திருச்செந்தூரன்), கரவெட்டி பிரதேச சபை எல்லைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள மரபுரிமைச் சின்னங்கள் (செல்வி தேவதாசன் தர்சனா), கிராமியச் சூழலை மூலாதாரமாகக் கொண்டு பிரதேச மட்டத்தில் சமூக பொருளாதார உளப்பாங்கு மாற்றங்களினூடாக மக்களை வலுவூட்டல் (முருகேசு அனந்தேஸ்வரன்), வடமராட்சியில் இருந்து வெளியான சஞ்சிகைகள் (க.பரணீதரன்), வடமராட்சியின் பிரதான சேவை மையமாக நெல்லியடி நகரம்: தற்போதைய இயங்குநிலையும் திட்டமிடல் பரிந்துரைகளும் (செல்வராஜா ரவீந்திரன்), பிரதேச சபைகளில் சோலைவரி அல்லது ஆதனவரி விதித்தல் (வி.பரமேஸ்வரன்), ஊடக ஆளுகையில் வடமராட்சி (இ.தயாபரன்), உள்;ராட்சி அரசாங்கமும் ஜனநாயக மறுமலர்ச்சி வாய்ப்புகளும் (ஐ.வி.மகாசேனன்), வடமராட்சியும் கண்டல் தாவரங்களும் பரவலும் (கணபதிப்பிள்ளை அசோகன்), உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது (க.ஈஸ்வரன்), வதிரி பொது நூலகமும் அதன் சேவைகளும் (க.ஈஸ்வரன்), உடுப்பிட்டி பொது நூலகம் (இ.கார்த்திகா), ஸ்ரீ பரமானந்தா சிறுவர், முதியோர் இல்லம் (வே.விசுவலிங்கம்), உள்;ராட்சி சபைகளின் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் முறைமை (ஆர்.சி.அமல்ராஜ்), தமிழர் பாரம்பரிய வைத்தியமும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் அதன் சேவையும் (பா.பிரபாகரன்), வடமராட்சி பிரதேசத்தின் கண்டல் தாவரங்களும் பறவைகளின் பல்வகைமையும் (பாக்கியநாதன் ராஜ்குமார்), எமது வாழ்வியல் சந்தைகள் (இ.இராகவன்), உள்;ராட்சியின் வரைவிலக்கணம் (எஸ்.இராசையா), கட்டைவேலி பொது நூலகத்தின் செயற்பாட்டின் ஒரு பார்வை (திருமதி பு.பிறிஷானி), கரவெட்டி பிரதேசமும் விளையாட்டுத் துறையின் விருத்தியும் (பா.முகுந்தன்), வடமாகாணத்தின் முன்பள்ளிக் கல்வியும் எதிர்கொள்ளும் சவால்களும் (சுப்பிரமணியம் சற்குணராஜா), சமூக ஆரோக்கியத்தில் பரதக் கலையின் வகிபங்கு (அன்ரனி சூசைப்பிள்ளை), இளையோர்களை நல்வழிப்படுத்தல் ஆற்றுப்படுத்தலை இழந்துவிட்டனவா எமது குடும்பங்கள்? (புலோலியூர் வேல் நந்தகுமார்), ஒடுங்கிவரும் உறவுப்பாலங்கள் (திருமதி கே.இராஜேஸ்வரி), வாசிப்பை நேசிப்போம் (செல்வி தேனுஷா பொன்னம்பலம்), நவீன மருத்துவப் புரட்சி யுகத்தில் புதியவகை நோய்கள் (திருமதி கீர்த்தனா சிவதாசன்), வாசிப்பின் முக்கியத்துவம் (ஜெ.அபிவர்ஷன்), நூலகம் (திருமதி கமலநாதன் சுவர்ணலதா), இலக்கிய விமர்சனம் (செல்வி ஜெகநாதன் பானுஜா), சிறுவர் துஷ்பிரயோகம் (செல்வி ஆனந்தராசா டிலக்ஷனா), வாசிப்பு என்ற மனிதச் சிறகாய் உலகைச் சுற்றுவோம் (சிவகுமார் சிவதருண்), போதையற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் (முகுந்தன் சங்கவி), அனுபவப் பகிர்வு (ஜெ.சறோஜா), சமையலறை உங்கள் குடும்ப மருத்துவன் (திருமதி சிவநேசன் சறோஜா), தனித்துவமாய் வாழி வாழி (வதிரி கண எதிர்வீரசிங்கம்), நூல்கள் (சிவானந்தம் விஷ்ணுகா), புத்தகமே என் வாழ்வின் பொக்கிஷமே (ரமணன் மெரினா) ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பாக, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் உள்ளடங்கும் பாடசாலைகள், முன்பள்ளிகள், சனசமூக நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், ஆயர்வேத வைத்தியசாலைகள், அரச வைத்தியசாலை, தேவாலயங்கள், இந்து ஆலயங்கள், மாதர் கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், அப்பிரதேச படைப்பாளிகளின் நாவல்கள் என்பன பட்டியலாக்கப்பட்டுள்ளன.