கனகசபாபதி சரவணபவன். திருக்கோணமலை: திருகோணமலை வெளியீட்டாளர்கள், 346, அன்புவழிபுரம், 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 92 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5சமீ., ISBN: 978-955-38500-2-7.
குளக்கோட்டனின் பணி குறித்த கவிராஜவரோதயனின் கவிச் சித்திரமே கோணேசர் கல்வெட்டு. குளக்கோட்டனின் ஆலய விதிகளும் நியதிகளும் பாடலாகவும் உரைநடைகளாகவும் எழுதப்பட்ட வரலாற்று இலக்கிய வடிவம் இது. இலங்கையின் மிகத் தொன்iயான தமிழ் வரலாற்று நூலான கோணேசர் கல்வெட்டு ஆலயத் தொன்மை மரபுகளையும், குளக்கோட்டனின் பணிகளையும் செவ்வியல் இலக்கியமாகத் தருகின்றது. எதிர்கால வரலாற்று ஆர்வலர்களின் தொடர்ச்சியான தேவை கருதி கோணேசர் கல்வெட்டை மிக எளிமைப்படுத்தப்பட்ட உரைடன் மீண்டும் வெளியிட்டுள்ளார் இந்நூலாசிரியர். கோணேசர் கல்வெட்டில் உள்ளவாறு கோவிலின் திரவிய இருப்புக்களின் பட்டியல் தனியாக இணைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போர்த்துக்கேயரின் கோயில் கொள்ளையுடன் காணாமல் போனவையாகும். கோணேசர் கல்வெட்டின் ஓலைச் சுவடிகளை ஒளிநகலாக்கி இந்நூலின் இறுதியில் இணைத்துள்ளார்.