17990 பாலஸ்தீனம்: எரியும் தேசம்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

116 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-21-4.

இதுவரை 12 கவிதைத் தொகுதிகளை படைத்துள்ள ஐங்கரன் விக்கினேஸ்வரா நீண்ட காலமாக சர்வதேச அரசியல் விவகார ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருபவர். சார்ள்ஸ், நவீனன் ஆகிய புனைபெயர்களாலும் இலக்கிய உலகில் அறியப்பட்டவர். தற்போது அவுஸ்திரேலியாவில் மருத்துவ சேவையாற்றி வருகின்றார். யாழ் ஈழநாடு, காலைக்கதிர், மாலைமுரசு, வீரகேசரி, தினக்குரல், தினகரன், கனடா ஈழமுரசு, உலகத் தமிழர், சுபீட்சம், உதயம் ஆகிய ஊடகங்களில் பிரசுரமான சமகால பாலஸ்தீன போர்க்கள நிகழ்வுகளின் விவரணங்களான 15 ஆய்வுக் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. இஸ்ரேல் போர் பிரகடனம்: பிணையக் கைதிகளாக இஸ்ரேல் ராணுவ வீரர்கள், மொசாட் ஏள ஹமாஸ்: மத்திய கிழக்கின் போர் வலு மாற்றம், முழு முற்றுகைக்குள் காஸா: இஸ்ரேல் தொடரும் போர்க்குற்றம், இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீனம்-ஈழத்தில் பறிபோகும் தமிழர் தாயகம், காஸா மருத்துவமனையை தாக்கியழித்த இஸ்ரேல்: யாழ் ஆஸ்பத்திரி படுகொலையின் 36ஆவது நினைவுதினம், ஊடகங்களின் மீதான இஸ்ரேலின் போர்: ஜெருசலேமில் அல் ஜஸீராவுக்குத் தடை, இந்தியா இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவு, சிரியா மீது இஸ்ரேல்  தொடரும் வான் தாக்குதல், மீண்டும் பாலஸ்தீனரின் காஸா இடப்பெயர்வும் ஒக்டோபர் 1995இல் தமிழரின் யாழ்ப்பாண இடப்பெயர்வும், அகண்ட இஸ்ரேல் திட்டத்திற்கான ஆக்கிரமிப்பு, அரபு நாடுகளின் இஸ்ரேலுடனான ஒப்பந்தங்கள் எனப் பல்வேறு விடயங்கள் இக்கட்டுரைகளில் ஆராயப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 299ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்