வெ.சாமிநாத சர்மா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 2வது பதிப்பு 2018, 1வது பதிப்பு 1936. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
viii, 55 பக்கம், வரைபடம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-685-108-3.
இன்று எத்தியோப்பியா என்று அழைக்கப்படும் அபிசீனியாவின் வரலாறு. எத்தியோப்பிய அரச குடும்பமும், ஜப்பானிய அரச குடும்பமும் உலக அரச குடும்பங்களிடையே சிறப்பாகச் சொல்லப்பட்டதாக கூறும் ஆசிரியர், 1936ஆம் ஆண்டு வெளியிட்ட இந்நூலில் அபிசீனியா பேரரசனான ஹெயில் செலாஸியின் வரலாற்றினூடாக எத்தியோப்பிய மக்களின் சமூக வரலாற்றையும், புவியியல், சமூகப் பொருளாதாரம் பற்றிய குறிப்புகளையும் ஆங்காங்கே விபரித்துள்ளார். அபிசீனியா என்பதன் பொருள் ‘கலப்பு இன மக்கள் வாழும் நாடு” என்பதாகப் பொருள் கொள்வதாகவும், வருடத்தின் குறைந்த காலமே மழைவீழ்ச்சி தரும் இடமாக எத்தியோப்பியா மட்டுமே உள்ளதாகக் குறிப்பிடுகிறார். கோப்பி வெளிநாட்டுக்கு முதன் முதலில் ஏற்றுமதி செய்யப்பட்டது இந்நாட்டில் உள்ள ‘காபா’ என்ற மாநிலத்திலிருந்தே என்கிறார். அதனாலேயே காபி (Coffee) என்ற பெயர் வழக்கில் இடம்பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். இன்றுள்ள எத்தியோப்பியாவுக்கும் இந்நூல் எழுதப்பட்ட காலத்தைய அபிசீனியாவுக்கும் இடையே காணப்படும் வேறுபாடு துலக்கமாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. இந்நூலில் அபிசீனியா, சரித்திர வரலாறு, நாடும் நாட்டு மக்களும், அரச குடும்பம், இத்தாலி-அபிசீனிய யுத்தம் ஆகிய அத்தியாயங்களினூடாக இதனை விளங்கிக்கொள்ள முடிகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 116100).