17993 ஈழத்தமிழரின் புலம்பெயர் இலக்கியம்.

இரா.செங்கொடி. சென்னை 600 018: பாரதி புத்தகாலயம், இல.7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (சென்னை 600 005: பிரின்டெக்).

206 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-81-969314-6-9.

இரா.செங்கொடி கடலூர் மாவட்டம் திருவாமூரில் பிறந்தவர். சென்னையிலுள்ள சேர் தியாகராஜா கல்லூரியில் தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகின்றார். இந்நூலில் பிரிதலும் பிரிதல் நிமித்தமும், பயணநிலை அவலம், அகதித் தஞ்சக் கோரிக்கை-குடியுரிமை-கடவுச்சீட்டுச் சிக்கல்கள், ஒதுக்குதலும் ஒதுக்குதல் நிமித்தமும் (நிறவெறிப் பாகுபாடுகள்), வசிப்பிடச் சிக்கல், புகலிடத் தொழிலாளர் நிலை, மொழி வளர்ச்சியும் மரபு மீட்டுருவாக்கமும், பெற்றோர் குழந்தைகளிடையே இணக்கமின்மை, பருவகால இடர்ப்பாடுகள், தாய் மண் ஏக்கம், அந்நியமாதல், போதைப் பொருள் கடத்தலும் குற்றச்செயல்களில் ஈடுபடுதலும், போதைப் பழக்கத்துக்கு அடிமையாதல், தற்கொலை முயற்சிகள், முதியோர் நிலை, போர் எதிர்ப்புக் குரல், புலம்பெயர் வாழ்வில் பெண்கள் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகள், மணக்கொடைக் கொடுமை, பெண் தனித்துவத்தைக் கட்டமைத்தல், அனைத்துலக நோக்கு, எதிர்காலம், புகலிடச் சிற்றிதழ்கள் அறிமுகம், துணைநூற்பட்டியல் இதழ்கள் நூல்கள் ஆகிய 22 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பேராசிரியர் சேரன் கனடாவிலிருந்து எழுதிய பின்னட்டைக் குறிப்பு பின்வருமாறு அமைந்துள்ளது. ‘தமிழ் அடையாளத்தையும் தமிழ்ச் சமூகங்களின் வரலாற்றையும் பரிணாமங்களையும் பேசும்போது எமது புலம்பெயர்வுகளையும் எமது கூலி வாழ்வையும் அகதி வாழ்வையும் அலைந்துழல்வு களையும் நாம் தீவிரமாகப் பேசவேண்டும். அவற்றை விட்டால் எமது தமிழ் அடையாளம் சாத்தியமில்லை. சென்றொழிந்த காலத்தின் தமிழ் அரசுகளின் மேன்மை, வீரம், பெருமிதம் அல்ல இங்கு எமது தேவை. துன்பம், கூலித்துவம் (Coolitude) என்பவையும் நமது வரலாற்று அடையாளங்கள் என்பதையும் நாம் ஏற்பதும் கொண்டாடுவதும் இன்றியமையாதது. பேராசிரியர் செங்கொடி தனது ஆய்வுச் சிறப்பின் மூலம் சொல்லும் தரவுகளும் பகுப்பாய்வும் தமிழுக்கும் தமிழாய்வுக்கும் புலம்பெயர் தமிழ்ச் சமூகங்கள் பற்றிய அறிவுத் தேடலுக்கும் வழி அமைக்கும்’.

ஏனைய பதிவுகள்

17386 பதார்த்த சூடாமணி உரை.

நாகரத்தினம் கணேசலிங்கநாதன் (பதிப்பாசிரியர்). வட்டுக்கோட்டை: நாகரத்தினம் கணேசலிங்கநாதன், முருக வாசா, மதன்மை பாங்கர் இல்லம், சிவன் கொவிலடி, வட்டு மேற்கு, 2வது பதிப்பு, நவம்பர் 2023, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (அச்சக விபரம்