17994 கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்: அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்.

மாலன். (தொகுப்பாசிரியர்). சென்னை 600018: சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, 1வது பதிப்பு, 2015. (சென்னை 1: இம்பீரியல் கிராப்பிக்ஸ்).

176 பக்கம், விலை: இந்திய ரூபா 110., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-260-4470-2.

பத்து அயல்நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த 14 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பு, கண்களுக்கு அப்பால், இதயத்திற்கு அருகில் உள்ள வாழ்க்கை பற்றிய பதிவுகள். பூமிப்பந்தெங்கும் தமிழ்ப் புனைவுலகம் கொடிவிட்டுப் பரந்திருப்பதற்கு இத்தொகுப்பு ஒரு சாட்சியமாக அமைகின்றது. ஓணானுக்குப் பிறந்தவன் (அ.முத்துலிங்கம்), விடுதலையாதல் (ரெ.கார்த்திகேசு), செந்தமிழ் நகர் (நாகரத்தினம் கிருஷ்ணா), அரசனின் வருகை (உமா வரதராஜன்), அவன் ஒரு இனவாதி? (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்), முட்டர்பாஸ் (பொ.கருணாகரமூர்த்தி), ஒட்டுக் கன்றுகளின் காலம் (ஆ.சி.கந்தராஜா), ஒரு கூத்தனின் வருகை (டாக்டர் சண்முகசிவா), ஓர் இதயம் வறுமைகொண்டிருக்கிறது (அ.யேசுராசா), யாருக்குப் புரியும்? (கீதா பென்னெட்), அலிசா (லதா), கல்லட்டியல் (சந்திரவதனா), கலைஞன் (ஆசிப் மீரான்), 5:12 Pஆ. (எம்.கே.குமார்) ஆகிய பதினான்கு சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. ‘புதிய தலைமுறை’ வார இதழின் ஆசிரியரான மாலன், இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னணி இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்