கி.பழநியப்பனார். கொழும்பு 13: கொட்டாஞ்சேனை அருள்மிகு வரதராஜப் பிள்ளையார் கோவில் வெளியீடு, இல. 105, கொட்டாஞ்சேனைத் தெரு, 1வது பதிப்பு, மார்கழி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல் மாடி ரகிசா கட்டடம், 834, அண்ணா சாலை).
82 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 24.5×18.5 சமீ.
சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கப்படங்களுடன் எளிமையாக விளக்கும் வகையில் எழுதப்பட்ட இந்நூல் 1995 மார்கழித் திருவெம்பாவை நிகழ்வின் போது கொட்டாஞ்சேனை அருள்மிகு வரதராஜப் பிள்ளையார் கோவில் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. சிவ வழிபாடுபற்றிய அறிவினை இதுவரை பெற்றிராத சைவ அடியார்கள் விரும்பிப் படிக்கக்கூடிய வகையில் தெளிவாகவும் எளிமையாகவும் எழுதப்பட்டுள்ளது. இந்நூலை அறநெறியண்ணல் மதுரை கி.பழநியப்பனார் தனது 85ஆவது அகவையில் மேற்படி ஆலயத்துக்கென எழுதி வழங்கியுள்ளார். நூலின் இறுதிப் பகுதியில் இணைக்கப்பெற்றுள்ள தோத்திரப் பாடல்கள் இசையுடன் பாடத்தக்கவை. கோவில்களில் பூசைகளின் போது படிக்கவேண்டிய பஞ்சபுராணப் பாடல்கள் சிலவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.