ஆயிஷா இரா. நடராசன். சென்னை 600 018: பாரதி புத்தகாலயம், இல.7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (சென்னை 600 005: பிரின்டெக்).
96 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-968043-3-6.
தற்கொலைக்கு உகந்த இடம் நூலகமல்ல, நூலகமே வெல்லும், நூலகர் என்பது ஆண்பால் அல்ல, ஐன்ஸ்டீனின் மூளை உள்ள நூலகம், சிலந்தி மனிதன் சிவப்பானது ஏன்?, ஒரு கண்டுபிடிப்பாளரின் கடைசி நூலகம், விழியற்ற தேவதைகளின் வீதி நூலகம், இரகசிய நூலகமே!, மிதக்கும் நூலகம், நடக்கும் நூலகம், ஜெ.கே.வைச் செதுக்கிய நூலகம், உலகை மாற்றிய ஒற்றை நூலகம், எரியும் நூலகம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட நூலகங்கள் சார்ந்த 13 கட்டுரைகளை இந்நூலில் ஆசிரியர் உள்ளடக்கியுள்ளார். இறுதிக் கட்டுரையான ‘எரியும் நூலகம்’, யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றிய கட்டுரையாகும். தமிழின் முன்னணி அறிவியல் மற்றும் அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு.ஆயிஷா இரா.நடராசன், தன் அறிவியல் புனைகதை நூல்களுக்காக சாகித்திய அகாதெமி விருது (சிறால் இலக்கியம்), தமிழ் வளர்ச்சித் துறை விருது உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார்.