17998 நோபல் பரிசு பெற்ற பொருளியலறிஞர்கள்-பாகம் 01 (1969-1978).

சா.இராமு. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-685-104-5.

இந்நூலில் இரக்னர் ஆன்டன் கிட்டில் ஃபிரிஷ் (1969), ஜான்டின் பெர்ஜன் (1969), பால் அந்தோணி சாமுவேல்சன் (1970), சைமன் கஸ்நெட்ஸ் (1971), சர் ஜான் ரிச்சர்டு ஹிக்ஸ் (1972), கென்னத் ஜோசஃப் ஆரொ (1972), வாசிலி லியான்டிஃப் (1973), குன்னர் மிர்தல் (1974), ஃபிரடெரிக் ஆகஸ்டு வான் ஹேயக் (1974), லியோனிட் விட்டலியேவிச் கன்டோரோவிச் (1975), ஜாலிங் சார்லஸ் கூப்மன்ஸ் (1975), மில்டன் ஃபிரீட்மன் (1976), பெர்டில் கோதர்டு ஓலின் (1977), ஜேம்ஸ் எட்வர்ட் மீடு (1977), ஹெபர்ட் அலெக்சாண்டர் சைமன் (1978) ஆகிய 15 பொருளியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. நூலாசிரியர் சாமிநாதன் இராமு, தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தின் இராஜகிரியைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், அரசுத் தேர்வுகள் மற்றும் பாடத்திட்டக் குழு ஆகியவற்றில் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70205).

ஏனைய பதிவுகள்