18000 மகிந்த ராஜபக்சே: சூழ்ச்சியும் தந்திரமும்.

சேவியர். சென்னை 600016: பிளாக்ஹோல் மீடியா பப்ளிக்கேஷன் லிமிட்டெட், எண். 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர், 1வது பதிப்பு, மே 2010. (சென்னை: சென்னை மைக்ரோ பிரின்டர்ஸ் லிமிட்டெட்).

140 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-910271-3-6.

சூழ்ச்சிகளாலும் தந்திரங்களாலும் பலரையும் பலமிழக்கச் செய்து முன்னேறும் அரசியல் சதுரங்கத்தில், ராஜபக்சேயின் விரல்கள் வீரியமானவை. அவருடைய பல நடவடிக்கைகளுக்குப் பின்னால் உறைந்து கிடக்கும் உண்மைகளையும், தந்திரங்களையும் திகிலுடன் விளக்குகிறது இந்நூல். ஆக்டொபஸ் கரங்களாய் இலங்கையின் வளத்தையெல்லாம் ராஜபக்சே குடும்பம் சுரண்டி ஆளுவது எப்படி? ‘இனிமேல் இலங்கையின் எதிர்காலம்?’ என்னும் கேள்விக்கு ராஜபக்சேயின் தந்திரத் திட்டம் என்ன?, மேற்குலக நாடுகளின் குரலுக்கு சர்வதேச நாடுகள் தொடை நடுங்க, ராஜபக்சே சற்றும் அசராது இருப்பதன்; பின்னணி என்ன? உலக நாடுகளையெல்லாம் பாய்ந்து பிடுங்கும் ஐ.நா.சபை, இலங்கையைக் கண்டு பம்மிப் பதுங்குவது ஏன்?, ‘நாங்கள் என்ன இந்தியாவின் மாநிலமாக வேண்டுமா?’எனக் கோபத்தில் கொக்கரித்த ராஜபக்சே, இப்போது ‘இந்தியா என் உறவு நாடு’ எனச் சொல்வது ஏன்? ராஜபக்சேயின் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் விரிவாக அலசும் இந்த நூல், அவருடைய இளமைக்காலம், காதல், மதம் போன்றவற்றையும் சேர்த்தே பதிவுசெய்கின்றது. நூலாசிரியர் கடந்த 15 ஆண்டுகளாக எழுத்துத் துறையில் இயங்கி வருபவர். கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றின் உயரதிகாரியாகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்