12822 – கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நாவல்).

கே.எஸ்.பாலச்சந்திரன். சென்னை 600078: வடலி, எண். 6/3, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர். நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

305 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21 x 13.5 சமீ., ISBN: 978-81-90840- 50-7.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இந்நாவல் அதற்கும் ஒரு தசாப்தம் முந்திய 1979-80 ஆண்டுக்காலப் பகுதியை பதிவுசெய்ய முற்பட்டுள்ளது. ‘மான் பாய்ஞ்ச வெளி’ கிராமத்தில் மீனவ சமூகத்தில் கதை களம்கொள்கின்றது. சம்மாட்டி மரியாம்பிள்ளை, தாய் மதலேனாள், அந்தோனி, அவனது தங்கை எலிசபெத், சின்னத் தங்கை மேரி, இளம் விதவையான ஸ்ரெல்லா எனத் தொடரும் பாத்திரங்கள் உயிரோட்டமாக இந்நாவலில் உலாவருகின்றன.

ஏனைய பதிவுகள்