12523 – நியூ வேவ் டிரைவிங் ஸ்கூல் (New Wave Driving School).

குமாரசாமி இந்திரசித். லண்டன் HA 9 7ND: New Wave Driving School, Office 203, 11 Courtenay Road, East Lane,Wembley 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

iv, 666 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISDN: 978-1-908357-47-2.

1.1.2013 முதல் பயன்படுத்தத்தக்க பிரித்தானிய உத்தியோகபூர்வ சாரதி நியம நிறுவனம் னுஏடுயு வழங்கிய எழுத்துமூல கேள்வி-பதில் தரவுகளை உள்ளடக்கிய வாகன ஓட்டுநருக்கான பயிற்சிக் கைநூல். இது மீட்டல் கேள்விக் கொத்தினையும் எழுத்துமூல பரீட்சைக்காகத் தேவைப்படும் அறிவும்,அதனைப் புரிந்துகொள்வதற் கான பாடநெறியும் உள்ளடங்கியது. விழிப்புணர்வு, மனோபாவம், பாதுகாப்பும் உங்கள் வாகனமும், பாதுகாப்பு எல்லைக் கோடுகள், ஆபத்துக்கான முன்னுணர்வு, காயம்படத்தக்க வீதிப் பாவனையாளர்கள், வேறுவகையான வாகனங்கள், வாகனத்தைக் கையாளல், நெடுஞ்சாலை வீதி விதிகள், வீதிவிதி முறைகள், வீதியும் வீதிச் சமிக்ஞைகளும், ஆவணங்கள், சம்பவங்கள், விபத்துக்களும் அவசரகால நிலைமைகளும், வாகனச் சுமையேற்றல் ஆகிய பதினான்கு பிரிவுகளில் இவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12050 – இலங்கையில் கற்புடைமாதர் வழிபாடு.

க.இ.குமாரசாமி (தொகுப்பாசிரியர், புனைபெயர்: கோவைக்கிழார்). கோப்பாய்: க.இ.குமாரசாமி, அரவிந்த வாசம், கிளுவானை வீதி, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. இலங்கைத்

12087 – வேதாரணிய புராணம்.

அகோரதேவர் (மூலம்), க.வேற்பிள்ளை (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: அ.அப்பாக்குட்டியாபிள்ளை, தேவஸ்தான பிரதம இலிகிதர் (தேவஸ்தானம் ஹெட் கிளார்க்கு), வேதாரணிய தேவஸ்தானம், வரணி, 1வது பதிப்பு, 1898. (சென்னபட்டணம்: ஸ்ரீ லலிதா அச்சியந்திரசாலை). 467+20 பக்கம், விலை:

12361 – இளங்கதிர்: 32ஆவது ஆண்டு மலர் 1998-1999.

12361 இளங்கதிர்: 32ஆவது ஆண்டு மலர் ; 1998-1999. பாலகிருஷ்ணன் பிரதாபன் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1999. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை).

12718 – கிரிக்கெட் உலகில் பிரகாசித்தவர்கள்.

நூராணியா ஹசன். மாவனல்ல: நூராணியா பதிப்பகம், 157, உயன்வத்தை, தெவனகல, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (மாவனல்ல: எம்.ஜே.எம். ஓப்செட் அச்சகம், 119 பிரதான வீதி). .xi, 52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா