12877 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 5 (1987/1988).

கே.சுதாகர் (இதழ் ஆசிரியர்), S.T.B. இராஜேஸ்வரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).

x, 150 பக்கம், தகடுகள், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18 சமீ.

‘யாழ்ப்பாணப் புவியியலாளன்’ இதழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையால் 1983 இல் முதலில் வெளிவந்தது. பின்னர் இந்த இதழ் காலத்துக்குக் காலம் புவியியல் துறையால் வெளியிடப்பட்டது. இந்த இதழை மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் அலங்கரித்தனர். இலங்கையின் நில அமைப்பு, பயிர்ச்செய்கை, போன்ற பல இலங்கைப் புவியியல் சார் கட்டுரைகள் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது. இவ்வைந்தாவது இதழில், இலங்கையில் பல்கலைக்கழகப் புவியியல் கல்வி வளர்ச்சி 1940-1990 (பொ.பாலசுந்தரம்பிள்ளை), விமான ஒளிப்படங்களை அடிப்படையாகக் கொண்ட புவி வெளியுருவப் படங்களும் அவற்றின் பயன்பாடுகளும் (S.T.B. இராஜேஸ்வரன்), காலநிலை மாற்றங்களும் அதற்கான சான்றுகளும் (க.சுதாகர்), ஆவியாக்க ஆவியுயிர்ப்புக் கணிப்பீடுகளும் அவற்றின் பயன்பாடுகளும் (செல்வி ளு.கணபதிப்பிள்ளை), இலங்கையின் வரட்சி மாதங்களின் நிகழ்வுகள் (செ.பாலச்சந்திரன்), வளிமண்டல பொதுச் சுற்றோட்டம்-சிறப்பாக அயனத்திற்குரிய சுற்றோட்டம் (ஜெ. கஜேந்திரபாலன்), அயனச் சூறாவளியின் நிகழ்வுகளும் அதன் தாக்கங்களும் (என்.மீரா), தென்னாசிய மொன்சூன் சுற்றோட்டம் (க.இராஜேந்திரம்), தென்னாசிய நாடுகளின் நீர்ப்பாசன நடவடிக்கைகளும் அவற்றின் அபிவிருத்தியும் (அ. கணபதிப்பிள்ளை), வடக்குக் கிழக்குப் பிரதேச நீர்வள அபிவிருத்தி ஓர் புவியியல் நோக்கு (மா.புவனேஸ்வரன்), விருத்தியடைந்த நாடுகளின் கோதுமை வேளாண்மை (க.ஜெயானந்தகுமாரி), பருவக் காற்றாசியாவின் நெற்செய்கை (ச.விஜயராணி), இயற்கை காடுகளும், அவற்றின் உலகளாவிய முக்கியத்தவமும் (ஜெ.ஜயந்தி), ஜப்பானின் கைத்தொழில் வளர்ச்சி (கே.ரூபமூர்த்தி), இலங்கையில் இறப்புகளும் அவற்றிற்கான காரணிகளும் (க.குகபாலன்), உலகின் பெரு நகரங்கள் (ஜி. றொபேட்) ஆகிய புவியியல்சார் கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31490).

ஏனைய பதிவுகள்

Guide From Ra Luxury

Content Postoji Li Mobilna Verzija Book Away from Ra? Other Greatest Harbors Winrar 7 00 Korean 64 Piece The sea Of Theft Beta Lands To