12979 – பபிலானியாவில் இயேசுவும் தமிழர்களும்.

A.E.C.இராசரெத்தினம். வவுனியா: A.E.C.இராசரெத்தினம், 154, குட்செட் வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (வவுனியா: அமைதி அச்சகம், 154, குட்செட் வீதி).

83 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 x 14 சமீ.

இந்நூலாசிரியர் இயேசுவுக்கும் தமிழருக்கும் இடையில் இருந்த ஆதித் தொடர்பினை நிரூபிக்க முயன்றுள்ளார். தமிழருக்கு முருகன் போன்று, பபிலோனியாவில் இயேசு குலதெய்வமாக இருந்தார் என்கிறார். கலாநிதி தாவீது அடிகளாரும், ஞானப்பிரகாச அடிகளாரும் இதைக் கூறியுள்ளதாகப் பதிவுசெய்யும் இவ்வாசிரியர், தமிழைப்போன்ற திராவிட மொழியான ‘எலு’, அம்மொழியைப் பேசிய ஈழவர் அகதிகளாகப் பரவிப் புலம்பெயர்ந்தமையினால் அழிந்து விட்டது என்கிறார். இலங்கையில் விஜயனின் வருகையும் பபிலோனியாவின் வீழ்ச்சியும் ஒரே ஆண்டில் நடைபெறுகின்றது என்பதால் இலங்கைத் தமிழரின் பூர்வீகம் பபிலோனியா எனக் கூறுகின்றார். விஜயனையும் அவனது நண்பர்களையும் பபிலோனியாவிலிருந்து புலம்பெயர்ந்து இலங்கை வந்த தமிழர்களாக நிறுவ முனையும் ஆசிரியர் ஈழவர் மொழி ‘எலு’ என்பதை ஏற்பதன் மூலமே இதனை நிரூபிக்கலாம் என்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50051).

ஏனைய பதிவுகள்