2939 ஸ்ரீஸ்கந்ததநாதம்: மணிவிழா மலர் 16.10.2013.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: ஞா.இரத்தினசிங்கம், மணிவிழாக் குழுவின் சார்பாக, முகாமையாளர், ஆசிரிய நிலையம், யாழ்ப்பாணக் கல்வி வலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (யாழ்ப்பாணம்: ஆந்திரா டிஜிட்டல் பிரின்டர்ஸ்).

v, 155 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 17.5 சமீ.

மணிவிழாக்காணும் கல்வியியலாளர் ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தமூர்த்தி அவர்களின் சேவைநலன் பாராட்டி ஆசிச்செய்தி, வாழ்த்துரைகள் ஆகியவற்றுடன் பல்வேறு அறிஞர்களினால் எழுதப்பெற்ற 20 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. கட்டுரை கள், பணியும் பயனும், எனது பளை மகாவித்தியாலய வாழ்வுக்காலம், ஆசிரியத்துவம், பாடசாலைகளில் விளைதிறன்மிக்க கூட்ட முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துதல், கல்வியின் பண்புத் தரவிருத்தி ஒரு பன்முக நோக்கு, பாடசாலை மட்டத்தில் தலைமைத்துவத் திறன்களை வளர்த்தல், யாழ்ப்பாணத் தமிழாசிரியர் கல்விப் பாரம்பரியங்களும் மரபுகளும், கணித பாட அபிவிருத்தியில் அதிபரின் பங்கு, யாழ். பாடசாலை மட்டத்தில் தமிழ்மொழிப் பாடபோதனைஅவதானிப்பு, கல்வி தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் புதிய தொழில்நுட்பத்துறை, வாசிப்பீர் வளம்பெறுவீர், உளவியலில் புதிய வளர்ச்சிசூழலியல் உளவியல், இறையுணர்வின் விஞ்ஞான அடிப்படை, மருத்துவ விஞ்ஞானமும் பொறியியலும், க.பொ.த. உயர்தரத்தில் தொழில்நுட்பவியல் பாடவிதானம்: சாத்தியப்பாடுகளும் சவால்களும், உயர்தர வகுப்புகளுக்கான ஐந்தாவது துறையாக தொழில்நுட்பவியல் கற்கைத்துறை, சாட்சிகளின் முறைமைகளூடாக சிறுவர் உலகை வளம்படுத்துவோம், அபிவிருத்தியும் கல்விச் செலவும்- தொடர்புகளும் அறைகூவல்களும், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர் களுக்கான பயனுள்ள குறிப்புகள், வகுப்பறை முகாமைத்துவத்தில் ஆசிரியர் என்னும் பங்குதாரர் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54545).

மேலும் பார்க்க: 12009,12286,12308,12338,12831,12917,12957.

ஏனைய பதிவுகள்

Best Real cash Online casinos Of 2023

Posts Perform Payment Rate Cover anything from Local casino In order to Local casino? What Gambling establishment Programs Spend Instantly? 2: Create A free account