13A01 – இலங்கையில் இஸ்லாம்.

M.M.A.அஸீஸ். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 10, மெயின் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1963. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்).

(10), 224 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18 x 12.5 சமீ.

M.M.A.அஸீஸ் (1911-1973) அவர்கள் எழுதிய 26 கட்டுரைகளைக் கொண்ட நூல். நேர்வழி காட்டிய நாயகம், கல்விக்கு மதிப்பளித்த உம்மி நபி, வெற்றிகண்ட தீர்க்கதரிசி, மனிதனை மனிதனாக்கும் மார்க்கம், பரிசுத்த றமழானின் தத்துவங்கள், பெருநாளுக்கொரு சிந்தனை விருந்து, சாத்திரமும் சமத்துவமும் சமய வாழ்வும், முஸ்லிம் சகோதரத்துவம், தியாகத் திருநாள், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, வேற்றுமையில் ஒற்றுமை, எங்கள் குறிக்கோள், எங்கள் ஜின்னாஹ், பாக்கிஸ்தானின் முதல் மூன்றாண்டுகள், இலங்கையில் அறபிபாஷா, ஜாமிஉல் அல்ஹார், எமக்கு ஒரு ஜாமியஹ், முஸ்லிம்களின் கல்வி நிலை, பழமை என்ற விளக்கு, அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ், முஸ்லிம் கல்விச் சரித்திரச் சுருக்கம் 1-3, பாட அமைப்பில் பல மொழிகள், ஆத்மீக ஒளியே அறிவின் சிகரம், இக்பாலாற்றுப்படை ஆகிய தலப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கலாச்சார அமைச்சின் சாகித்திய மண்டலம் இந்நூலுக்கு அரச விருதினை வழங்கி கௌரவித்திருந்தது. 1963இல் வெளியிடப்பட்ட மூலநூலின் மீள்பதிப்பு இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18401.

ஏனைய பதிவுகள்

14549 சமாதானம்: தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்கான இலக்கியப் போட்டி எழுத்தாக்கங்கள் 2002.

தொகுப்புக் குழு, சிபில் வெத்தசிங்க (சித்திரங்கள்). கொழும்பு: ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பகம், 1வது பதிப்பு, 2002. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன). (9), 10-96 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,