14081 இந்து சமய பாடதிரட்டு: முதலாம் இரண்டாம் பாகங்கள்.

க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 2வது பதிப்பு, தை 1965, முதற் பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம்). viii, 323 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 21×13.5 சமீ. சைவ சமயப் பகுதி முழுவதும் அடங்கிய இந்நூல் க.பொ.த. வகுப்பு 1965-1966ம் ஆண்டுகளுக்குரியது. இந்நூலின் 32 பாடங்களைக் கொண்ட முதற் பாகத்தில் நான்கு பகுதிகளும், 48 பாடங்களைக் கொண்ட இரண்டாம் பாகத்தில் நான்கு பகுதிகளுமாக மொத்தம் எட்டுப்பகுதிகளில் 80 பாடங்கள் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. சைவப் புலவர் க.சி.குலரத்தினம் அவர்கள், யாழ்ப்பாணத்துச் சைவ பரிபாலன சபையிலும், அகில இலங்கை மத்திய மகாசபையிலும் நிர்வாக அங்கத்தவராய் இருந்து தொண்டு செய்தவர். சென்னை சைவசித்தாந்த மகாசமாசத்தினர் நடத்திய சைவப்புலவர் தேர்வில் 1946இல் முதல் வகுப்பில் திறமைச் சித்தியெய்தியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38623).

ஏனைய பதிவுகள்