17410 தமிழர் செவ்வியல் ஆடல்: சிறப்பு மலர். 

தெ.மதுசூதனன் (மலராசிரியர்). கொழும்பு 6:  கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

114 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 29.5×21சமீ.

பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் 2013இல் முதன்முறையாக ‘நுண்கலைக் குழு’ என்ற உபகுழுவை தாபித்தது. அந்தக் குழுவின் செயலாளராக திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா பணியாற்றியிருந்தார். அக்காலகட்டத்தில் ‘தமிழோடிசை பாடல்’ என்ற நிகழ்ச்சியை ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நுண்கலைக் குழுவினர் நடத்தியிருந்தார்கள். தமிழர் நுண்கலையின் தொடர்ச்சியாக, மீண்டும் ‘தமிழர் செவ்வியல் ஆடல்’ என்ற தொடர் முயற்சியை சங்கத்தினர் அண்மையில் நிகழ்த்தியிருந்தார்கள். அதன்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. இம்மலரில் ஆடற்கலையின் தோற்றம் (கார்த்திகா கணேசர்), சங்க இலக்கியம் காட்டும் ஆடற் திறன்கள் (செ.கற்பகம்), சிலப்பதிகாரத்தில் ஆடல் (ம.செ.இரபிசிங், ஆர். அகதா), பஞ்ச மரபில் நிருத்திய மரபு (எஸ்.சாராள்), சாந்திக் கூத்து (இரா.கலைக்கோவன்), உருத்திர கணிகையர் (வ.மகேஸ்வரன்), பத்தினிப் பெண்டிர் அல்லோம் (அ.கா.அழகர்சாமி), தஞ்சை நால்வர் வழிமுறைக் கலைஞர்கள் (ஞானம்பிகைதேவி குலேந்திரன்), தமிழ் ஆடற் கலைஞர்கள்-ஓரு சமூகவியல் நோக்கு (அருட்செல்வி கிருபைராஜா), தமிழரின் ஆடலான சதிர் என்னும் பரதநாட்டியம் (நா.மம்மது), நடனக்கலை மீட்டுருவாக்கமும் மேனிலையாக்கமும் (க.நர்மதா), இனச்சால்பு ஆடலியல் (சபா ஜெயராசா), ஈழத்தமிழர் கிராமிய ஆடல்கள் (தெ.மதுசூதனன்), உங்களுக்குச் சிறகுகள் உண்டாகட்டும் (சி.மௌனகுரு) ஆகிய 14 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

15830 சிலப்பதிகாரம்: நாட்டாரியல்-செவ்வியல்-ஆய்வியல்.

பாஸ்கரன் சுமன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 96 பக்கம், விலை: