14156 நாவலர் நூற்றாண்டு நினைவு விழாச் சிறப்பிதழ் 1979.

நா.சோமகாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, இல. 4, ஹோர்ட்டனடெரஸ், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (148) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ. கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் 28.10.1979இல் நடைபெற்ற நாவலர் நினைவு நூற்றாண்டுச் சிறப்பு விழாவின்போது வெளியிடப்பெற்ற சிறப்புமலர் இது. ஆசிந் செய்திகள், வாழ்த்துரைகள், அருளுரைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, இம்மலரில் பெருமளவிலான விளம்பரப் பக்கங்களுக்கிடையே கட்டுரைகள் இலைமறை காய்களாகத் தெரிகின்றன. நாவலர் நினைவு நூற்றாண்டு: நமது நோக்கமும் திட்டமும் (என்.சோமகாந்தன்), சென்ற காலத்தின் பழுதிலாத்திறனை நிகழ்காலத்திற்கு உணர்த்தும் விழா (வே.சிவராசா, ஆ.சிவநேசச் செல்வன்), நாவலர் நினைவு நூற்றாண்டு மாணவர் பேச்சுப் போட்டி (கி.ல~;மண ஐயர்), நாவலர் நினைவு நூற்றாண்டு மாணவர் கட்டுரைப் போட்டி (ஆ.சதாசிவம்), நாவலர் புத்தகக் கண்காட்சி (ச.அம்பிகைபாகன்), நூற்றாண்டு நிறைவு நினைவு மலர்: ஒரு முன்னோட்டம் (க.கைலாசபதி), நன்றி மறவோம் (கா.விசுவலிங்கம்), நாடெங்கும் நாவலர் விழாக்கள் (இடங்கள், நிகழ்வுத் திகதியுடனான பட்டியல்), நல்லூர் ஆறுமுக நாவலனார் -செய்யுள் (விபுலானந்த அடிகள்), நாவலர் பெருமான் (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), நாவலர் சைவக்காவலர்- செய்யுள் (சுத்தானந்த பாரதியார்), Pioneering Hero (A.M.A.Azeez), நாவலரும் தமிழ் மொழியும் (சொ.சிங்காரவேலன்), கல்வித்துறையில் நாவலரின் தீர்க்கதரிசனம் (கி.ல~;மண ஐயர்), நாவரசரும் நாவலரும் (தங்கம்மா அப்பாக்குட்டி), என் நெஞ்சினைக் கவர்ந்த இரு அஞ்சல்கள் (து.சிவசுந்தரம்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24827).

ஏனைய பதிவுகள்