7074 பயனிலைத் தருக்கம்: ஓர் அறிமுகம்.

கனகசபை சிவானந்தமூர்த்தி, கந்தசாமிஅன்ரன்டயஸ். யாழ்ப்பாணம்: அம்பாள் பப்ளிக்கேஷன்ஸ், புத்தூர், 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2001. (யாழ்ப்பாணம்: உயர் கல்விச்சேவை நிலையம்).

iv, (4), 110 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×15 சமீ.

Predicate Logic: An Introduction என்ற ஆங்கிலத் தலைப்புடனும் வெளிவந்துள்ள இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல்துறை விரிவுரையாளர்களாவர். இந்நூல் அளவையியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், அப்பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கும் பயன்தரவல்லது. பயனிலைத் தருக்கம்/அளவாக்கக் கோட்பாடு, வாதங்களை மதிப்பீடு செய்தல், பெறுகைமுறை/நியம நிரூபணமுறை, பாரம்பரிய உய்த்தறி அளவையியலும் பயனிலைத் தருக்கமும் ஆகிய நான்கு இயல்களில் எழுதப்பட்டுள்ள நூல் இது.  (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 544625).

ஏனைய பதிவுகள்