7080 சித்தாந்த விளக்கிற் சைவக்கிரியைகள்.

மு.கந்தையா. சுன்னாகம்: பண்டிதமணி மு.கந்தையா நூல் வெளியீட்டுக் கழகம், சத்தி முற்றம், ஏழாலை மேற்கு, 3வது பதிப்பு, ஜுலை 2005, 1வது பதிப்பு, 1978, 2வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430 காங்கேசன்துறை வீதி).

xxxii, 192 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.

ஆலயக் கிரியைகள் மற்றும் பூர்வ அபரக்கிரியைகள் வெறும் சம்பிரதாயங்கள் எனக் கருதுவது பெருந் தவறு. இவை அனைத்தும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு மார்க்கங்களுள்ளும் இறுதியாகவுள்ள ஞானத்தின் நிமித்தமாகும். இதனைப் பண்டிதமணி அவர்கள் இந்நூலில் எளிதாக விளக்கியுள்ளார். வேதந்தழுவிய வைதீகக் கிரியைகள் போலன்றி, சைவக் கிரியைகள் ஆகம நெறியை முக்கியமாகப் பின்பற்றுபவை. ஆகமாந்தம் என்ற சைவசித்தாந்தம் உலகம் போற்றும் உயர்ந்த தத்துவமாகும். இந்நூல் இதன்வழியாக சைவக்கிரியைகளை விளக்கமுனைகின்றது. மானிப்பாய் இந்து சமய விருத்திச் சங்கத்தின் வெளியீடாக 1978இல் முதலில் இந்நூல் வெளிவந்தது. தொடர்ந்த இரண்டாவது பதிப்பு, அமரர் முருகேசு கந்தப்பிள்ளை நினைவு வெளியீடாக கோலாலம்பூர் மலேசியா சிவத்திரு ஐ.குலவீரசிங்கத்தினால் 2001இல் வெளியிடப்பட்டது. பண்டிதமணி மு.கந்தையாவின் மறைவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தில் 7.7.2005 அன்று இந்த மூன்றாவது பதிப்பு வெளியிடப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29966).

ஏனைய பதிவுகள்

Winward Casino

Content Winward Casino $15 no deposit added bonus Best British Gambling enterprise for each No deposit Free Revolves Bonus $55 No deposit Incentive at the