7083 சைவ சித்தாந்த ஒழுக்கவியல் அடிப்படைகள்.

கலைவாணி இராமநாதன். யாழ்ப்பாணம்: கலைவாணி இராமநாதன், இந்து நாகரீகத் துறை, பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 1997. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரைவேட் லிமிட்டெட், 501/2, காலி வீதி).

(10), 112 பக்கம், விலை: ரூபா 140., அளவு: 21.5×14.5 சமீ.

திருமந்திரத்தில் மனிதநேயம், இந்து சமயக் கிரியைகளின் அடிப்படையும் சைவ சித்தாந்தக் கிரியை மரபும், சைவ சித்தாந்தத்தில் ஒழுக்கவியல் அடிப்படைகள், சைவசித்தாந்த அற விழுமியம், விவேகானந்தரின் மனித நேய விழுமியங்கள் ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் சைவ சித்தாந்தத்தின் ஒழுக்கவியல் அடிப்படைகளை ஆராய்கின்றது. கலைவாணி இராமநாதன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் இந்து நாகரீகத்துறையில் முதுநிலை விரிவுரையாளராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 126073).

ஏனைய பதிவுகள்

9051 அளவையியலும் விஞ்ஞான முறையும்: GAQ வகுப்புக்குரியது: மெய்யியல் 2 கடந்தகால வினா-விடை.

க.கேசவன். கொழும்பு 6: க.கேசவன், ஆசிரியர், இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). 80 பக்கம், விலை: ரூபா