சிறிபால ஹெரிக்கே, பீ.ஏ.ரெனிசன் பெரேரா, றமணி ஜயத்திலக்க, பியசீல வீரசேகர, சுகததாச றனுன்கே, எட்வின் ஆரியதாச (சிங்கள மூலம்), ஐ.தம்பிமுத்து (தமிழாக்கம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சிறிமதிபாயா, ஏணஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, 1977. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
iv, 86 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
நாட்டார் சமூகம், நிலமானிய முறைச் சமூகம், இன்றைய சமூகம், இலங்கைச் சமுதாயம் பற்றிய எண்ணக்கரு ஆகிய நான்கு இயல்களில் சமூகவியல் மூலக் கோட்பாடு- இரண்டாம் பாகம் எழுதப்பட்டுள்ளது. தேசிய உயர் கல்விச் சான்றிதழ்ப் பரீட்சைக்குரியதாக வெளியிடப்பட்டுள்ள நூல்.