என்.பாலகிருஷ்ணன். கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ்).
xvi, 180 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-240-5.
இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாகக் காணப்படும் பிரச்சினைகள் பற்றி ஆராயும் 14 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு இதழ்களில் 2009இல் வெளிவந்த இக்கட்டுரைகள் திருத்தி அமைக்கப்பட்டு நூல்வடிவில் வெளியிடப்படுகின்றன. காலனித்துவப் பின்னணியும் பொருளாதார மாற்றங்களும், அபிவிருத்தியில் அரசின் வகிபாகம், இலங்கை அரசாங்கத்தின் கடன்படுகை-போக்குகளும் பிரச்சினைகளும், நிதி நிறுவனங்களின் உறுதிப்பாடு-கேள்விக்குரியதாக உள்ளதேன்? இலங்கையின் அண்மைக்கால மத்திய வங்கி நாணயக்கொள்நெறிகள், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கக் கடன்பெறுகை, பொருளாதாரத்தில் பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கங்கள், அறிவுப் பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள், மனித அபிவிருத்தியின் பரிமாணங்களும் இலங்கையில் அவை பற்றிய அடைவுகளும், இலங்கையின் அபிவிருத்திப் பார்வையில் பால்நிலைகளின் பங்களிப்பு, அபிவிருத்தியின் அமைப்பு சார்ந்த மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும், உலக நிதி நெருக்கடியும் அதனைத் தொடர்ந்த உலகப் பொருளாதாரப் பின்னடைவும், அபிவிருத்தியில் நிர்வாகத்தின் பங்களிப்பு, அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக கணக்கு மீதான வாக்கெடுப்பு: அரசியல் பொருளாதார பின்னணி ஆகிய தலைப்புகளில் இவை அமைந்துள்ளன. பொருளியலைப் பாடமாகப் படிக்கும் மாணவர்களுக்கும், அத்துறையில் ஆர்வமுள்ள பிறருக்கும் ஏற்ற தகவல்கள் இதிலுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களின் பொருளியல் விரிவுரையாளராக 40 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய நாகலிங்கம் பாலகிருஷ்ணன், யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியாகவும், வவுனியா வளாகத்தின் நிறுவக முதல்வராகவும் சேவையாற்றியவர்.