செல்லத்தம்பி சிறீக்கந்தராசா.கொழும்பு 13: செ. சிறீக்கந்தராசா, 154, புதிய செட்டித்தெரு, 1வது பதிப்பு, 1979. (கொழும்பு 12: கலா அச்சகம் 258/5 Dam Street, Haltsdorf).
(10), 94 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 18×12.5 சமீ.
வித்தியோதய பல்கலைக்கழக வணிகப் பட்டதாரி மாணவர்களுக்கு வணிகச்சட்டம் பற்றி அப்பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் நிகழ்த்திய வேளையில் ஆசிரியரால் வழங்கப்பட்ட குறிப்புகளின் விரிவாக்கப்பட்ட நூல்வடிவம் இதுவாகும். பங்காண்மை அல்லது பங்கு வியாபாரம், பங்காண்மை பற்றிய இலங்கைச் சட்டங்கள், பங்காண்மை எவ்வாறு உருவாகின்றது, பங்காளர்களுக்கு இடையிலான உறவு, பங்காண்மை உடன்படிக்கை மாதிரிப்படிவம், பங்காளர்களும் மூன்றாம் ஆட்களும், பங்காண்மை எவ்வாறு முடிகின்றது, வரையறுத்த பங்காண்மைகள் ஆகிய எட்டுத் தலைப்புகளின்கீழ் 59 உப தலைப்புகளில் பங்காண்மைச்சட்டம் (டுயற ழக Pயசவநெசளாip) இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட உதவிச் சட்ட வரைஞரான வழக்குரைஞர் சிறீக்கந்தராசா வித்தியோதய, வித்தியாலங்காரப் பல்கலைக்கழகங்கள், கொழும்புத் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் பகுதிநேர விரிவுரையாளராகவும், இலங்கைச் சட்டக் கல்லூரி, இலங்கை வங்கித் தொழிலர் நிறுவகம் அகியவற்றின் பரீட்சைத் தேர்வாளருமாகப் பணியாற்றியவர். தற்போது புலம்பெயர்ந்து லண்டனில் இல்போர்ட் பகுதியில் சட்டத்தரணியாகப் பணியாற்றுகின்றார்.